Home /local-news /

அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவி இனத்தை மீட்க பள்ளி மாணவர்களின் அபார முயற்சி

அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவி இனத்தை மீட்க பள்ளி மாணவர்களின் அபார முயற்சி

School

School students' tremendous effort to rescue the sparrow 

உலக சிட்டுக்குருவிகள் தினமாக மார்ச் 20-ம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது. சிட்டுக்குருவி தினத்தையொட்டி சிட்டுக்குருவி கூடு கட்டிய விழுப்புரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவியை மீட்கும் முயற்சி எடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    உலக சிட்டுக்குருவிகள் தினமாக மார்ச் 20-ம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது. சிட்டுக்குருவி தினத்தையொட்டி சிட்டுக்குருவி கூடுகள் உருவாக்கி விழுப்புரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவியை மீட்கும் முயற்சி எடுத்துள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் ஒன்றியத்துக்குட்பட்டது பள்ளிகுளம் கிராமம். இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு என ஸ்மார்ட் கிளாஸ், கணினி ஆய்வகம், சுற்றுச்சூழல் மன்றம் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 150 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் என அனுசரிக்கப்படும் நிலையில், அப்பள்ளியில் பணியாற்றும் தமிழரசன் ஆசிரியர், 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடபுத்தகத்தில் அழிந்துவரும் இனங்களில் இடம் பெற்றுள்ள சிட்டுக்குருவி பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.

    இதனையடுத்து தமிழரசன் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக, மாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.இதனை அடுத்து மாணவர்களுக்கு கூண்டு செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு வீட்டில் வைத்து சிட்டுக் குருவியை எவ்வாறு இயற்கையாக பாதுகாப்பது என்பது குறித்து விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் விநாயகம், ஆசிரியர் தமிழரசன், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த சிட்டுக்குருவி மீட்பு முயற்சி குறித்து பள்ளி ஆசிரியர் நம்மிடம் தெரிவித்த போது சிட்டுக்குருவியானது விவசாயிகளின் நண்பனாக செயல்பட்டு வருவதாகவும், குறிப்பாக காய்கறி விளைவிக்கும் விவசாயிகளுக்கு இக்குருவி உதவி செய்வதாகவும், சிட்டுக்குருவி காய்கறிகளில் உள்ள புழு பூச்சிகளை உண்டு விவசாயிகளின் நண்பனாக திகழ்கிறது என்றார்.

    எனவே அழிந்து வரும் நிலையில் இருக்கும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த சிட்டுக்குருவி கூண்டு செய்யும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

    இந்த முயற்சியை பள்ளி மாணவ மாணவியர்கள் வெற்றிகரமாக செய்து 100- க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவி கூண்டுகளை செய்து முடித்துள்ளனர் .மேலும் இதுபோன்ற அழிவில் விளிம்பில் உள்ள பறவைகள் விலங்குகள் பற்றிய விழிப்புணர்வு மாணவ-மாணவிகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார் ஆசிரியர் தமிழரசன்


    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Karthick S
    First published:

    Tags: Viluppuram S22p13

    அடுத்த செய்தி