விழுப்புரம் நகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள், ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர். விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக தூய்மைப் பணியாளர்கள் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடந்து வந்து மனு அளித்தனர்.
விழுப்புரம் நகராட்சியில் 128 பேர் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக கூட்டுறவு சொசைட்டி கடன் தொகை மற்றும் ஆயுள் காப்பீட்டு தொகை செலுத்தாததால், பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் தாங்கள் அவதிக்கு உள்ளாகிறோம் என தூய்மைப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கடன் தொகை செலுத்தாததால், நாங்கள் கூட்டுறவு சொசைட்டி யில் வாங்கிய கடன் தொகைக்கு கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,
மேலும் கூட்டுறவு சொசைட்டியில் வாங்கிய கடன் தொகைக்கு, காப்பீடு தொகை செலுத்தாத காரணத்தினால் காப்பீட்டு தொகை காலாவதியாகும் நிலையும் உருவாகியுள்ளது, அதுமட்டுமல்லாமல் குடும்பத் தேவைக்காக, முன் கடன் பெற முடியாத நிலையும் உருவாகியுள்ளது. இதுபோன்று பல பிரச்சனைகள் எங்களுக்கு இதனால் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சனைகளை பற்றி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரணியாக நடந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் இந்த செயல்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளித்தனர்.
மேலும்,மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகின்ற 22-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாகவும் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.