விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பேரிடர், தீ விபத்தின் போது நோயாளிகளை எவ்வாறு மாடிகளிலிருந்தும், மற்ற பகுதிகளில் இருந்தும் காப்பாற்றுவது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை தீயணைப்பு வீரர்கள் நிகழ்த்திக்காட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விக்கிரவாண்டி அருகேயுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து மற்றும் கட்டிட இடர்பாடுகள், பேரிடர்களில் ஏற்படும் விபத்துக்களின் போது பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் மோகன், எஸ்.பி. ஸ்ரீநாதா மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின் கேஸ்ட்ரோ கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
நோயாளிகள் அரசு மருத்துவமனை அடுக்கு மாடி கட்டிடத்தில் சிக்கி கொண்டால், அந்த நோயாளியை கயிறு மூலமாக ஸ்டெச்சர் கொண்டு மீட்பது, கேஸ் சிலிண்டரில் தீ பற்றினால் அதனை எவ்வாறு அணைப்பது, இயற்கை சீற்றத்தின் போது காரில் மாட்டிக்கொள்பவரை எவ்வாறு மீட்பது போன்று தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனை ஊழியர்கள் இது போன்ற பேரிடரின் போது மீட்பு பணியில் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வுவையும் எற்படுத்தினர்.
இதனை மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவனைக்கு வந்திருந்தவர்கள் என அனைவரும் பார்வையிட்டு, இது போன்ற இக்கட்டான சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது குறித்த பல்வேறு முயற்சிகளையும் ஆலோசனைகளையும் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டனர். மேலும் ஒரு சில மருத்துவ ஊழியர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்த ஒத்திகையை செய்தும் பார்த்தார்கள்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.