Home /local-news /

விழுப்புரம்: பொங்கல் பண்டிகையையொட்டி உள்ளூர்களில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், போட்டிகள்

விழுப்புரம்: பொங்கல் பண்டிகையையொட்டி உள்ளூர்களில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், போட்டிகள்

பொங்கல்

பொங்கல் போட்டிகள்

பொங்கல் பண்டிகையை விழுப்புரம் பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடுவார்கள். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

    பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மிகவும் விமர்சையாக கொண்டாடுவார்கள். மாட்டுப் பொங்கலை அடுத்த நாளில் ஊர்களில் சில கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெறுவது வழக்கமாக வருகிறது.

    அந்த உள்ளூர் போட்டிகளில் கிரிக்கெட், கபடி, சைக்கிள் போட்டி, லெமன் வித் ஸ்பூன், சாக்குப் போட்டி, கோலப்போட்டி, நடனம் என பல்வேறு வகையான போட்டிகள் நடத்துவது வழக்கமாகும். இந்தப் போட்டியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.

    பொங்கலின் தொடர்ச்சியாக 3வது நாளில் உள்ளூர் திருவிழா ஒன்று நடத்துவார்கள். அதுபோல விழுப்புரம் அடுத்துள்ள தோகை பாடியில், சிறுவர்களுக்கு மட்டும் லெமன் வித் ஸ்பூன் மட்டும் கோலப் போட்டிகள், சைக்கிள் பந்தயம், பெண்களுக்கு கோலப் போட்டிகள் என பல போட்டிகள் நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சியில், ஊர் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள், சிறுமிகள் இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் ஒட்டுமொத்த கிராமமே மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளூர் திருவிழாவை கொண்டாடி னார்கள்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி