ஆந்திராவிலிருந்து
விழுப்புரம் வழியாக
திருச்சிக்கு ரயில் மூலமாக 40 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவிலிருந்து விழுப்புரம் வழியாக குருவாயூர் ரயிலில் திருச்சிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக போதைபொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் உதவியுடன் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையம் வந்தபோது பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரயில் நிலையத்தில் இருந்து சாக்கு மூட்டைகளுடன் வெளியே வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து அவர்கள் வைத்திருந்தசாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதற்குள் 7 பெரிய பண்டல்கள் மற்றும் 11 சிறிய பண்டல்களில் 40 கிலோ எடையில் 4 லட்சம் மதிப்பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை செய்ததில் தேனி உத்தமபாளையத்தை சார்ந்த சரஸ்வதி, ரமேஷ் என்பதும்ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாகவாங்கி வந்து விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறங்கி பிறகு புதிய பஸ் நிலையம் சென்று பேருந்து மூலமாக தேனி மாவட்டத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் பத்து வருடமாக தொடர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட முகவர்கள் ஆவார்கள். மேலும் கஞ்சா கடத்தலில் யார் யாருக்கெல்லாம் தொடர்ப்பு உள்ளது என்று போலீசார் இவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.