Home /local-news /

60 வருஷமா இங்குதான் வசிக்கிறோம்... காலி செய்ய சொல்கிறார்கள் - பட்டா வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

60 வருஷமா இங்குதான் வசிக்கிறோம்... காலி செய்ய சொல்கிறார்கள் - பட்டா வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

Petition for deed of residence for 60 years

Petition for deed of residence for 60 years

Villupuram District : மேல்மலையனூர் அருகே 60 ஆண்டுகளாக வசித்து வரும் வீடுகளை அகற்ற 86 குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பட்டா வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    விழுப்புரம் மாவட்டம்  மேல்மலையனூர் தாலுகா செவலபுரை குளக்கரை தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள்ஆட்சியர் அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். அவர்களின் கோரிக்கையாக, எங்கள் பகுதியில் 11 ஏக்கர் பரப்பில் 86 குடும்பத்தினர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வருகிறோம்.

    எங்கள் பகுதியில் பயன்படாத சிறியகுளம் உள்ளது. அதனுள் 11 ஏக்கர் பரப்பளவும் வருவாய்த்துறை கணக்கில் குளம்புறம்போக்கு என்று உள்ளது. அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி, சத்துணவு மைய கட்டிடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம சேவைமைய கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, திரவுபதியம்மன் கோவில், நாடகமேடை இவற்றை சுற்றித்தான் 86 வீடுகளும் உள்ளன.

    எங்கள் குடியிருப்புகளுக்குமின் இணைப்பு, குடிநீர் வசதி, சாலை வசதி அனைத்தும் ஊராட்சியால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளிலும் முறையாக வீட்டுவரி ரசீது உள்பட அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளும் செலுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் மேற்கண்ட 11 ஏக்கரில் உள்ள அனைத்து வீடுகளும் குளம் புறம்போக்கு என்று கூறி எங்களது வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர். நாங்கள் அனைவரும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவருகிறோம். எங்களுக்கு இந்த வீட்டை தவிர வேறு நிலமோ, வீடோ கிடையாது. எங்களுடைய வீடுகளை காலி செய்யும்பட்சத்தில் வயதானவர்கள், பள்ளி குழந்தைகள்உள்பட அனைவரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.

    எனவே பயன்படுத்தாத குளத்தை அதிகாரிகள் அளவீடு செய்து ஒதுக்கிவிட்டு குடியிருப்பு பகுதிகளைநிலம் வகை மாற்றம் செய்து எங்கள் 86 குடும்பத்தினருக்கும் பட்டா வழங்கி சட்டரீதியான பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இது குறித்து பரிசீலனை செய்வதாக கூறினர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Patta, Villupuram

    அடுத்த செய்தி