Home /local-news /

கண்காட்சியில் அசத்திய வளர்ப்பு நாய்கள் - வியந்த பார்வையாளர்கள்.!

கண்காட்சியில் அசத்திய வளர்ப்பு நாய்கள் - வியந்த பார்வையாளர்கள்.!

Pet

Pet dogs featured in the exhibition

விழுப்புரம் நகராட்சி பூங்காவில் வளர்ப்பு செல்லப்பிராணி நாய்களுக்கான கண்காட்சி மற்றும் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    விழுப்புரத்தில் உலக கால்நடை மருத்துவ தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற நாய் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.

    உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் விழுப்புரம் நகராட்சி பூங்காவில் வளர்ப்பு செல்லப்பிராணி நாய்களுக்கான கண்காட்சி மற்றும் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    இந்த கண்காட்சியில் விழுப்புரம், கோலியனூர், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட செல்லப்பிராணியான வளர்ப்பு நாய்கள் பங்கேற்றன.

    இதில் வெளிநாட்டு நாய்கள் ஆன கிரேடன், லப்ர்டோர், ஜெர்மன்ஷெபர்ட், கிரேட்டேன், போமேரினியன், ரோத்வ்ஹீளீர் ,டஷௌந்து உள்ளிட்ட வகைகளும், நம் நாட்டின் நாய்கள் ஆன சிப்பிபாறை, கண்ணி,மற்றும் கொம்பை போன்ற இனங்கள் உள்ளிட்ட 13 ரகங்களை சேர்ந்த நாய்கள் பங்கேற்றதில் கால்நடைத்துறை மருத்துவர்கள் நாய்களின் பராமரிப்பு மற்றும் தோற்றம், கட்டளைக்கு இணங்கி செயல்படுதல் ஆகியவற்றை பார்த்து ஒவ்வொரு நாய்களுக்கும் மதிப்பெண் வழங்கினர்.

    இதில் வெற்றிபெற்ற 13 ரகங்களை சார்ந்த 13 நாய்கள் வெற்றி பெற்றதால் அதன் உரிமையாளருக்கு கேடயம், சான்றிதழ்களை கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வழங்கப்பட்டன.

    செல்லப்பிராணி வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் ரயில்வே மற்றும் தமிழக காவல் துறையில் உள்ள ராக்கி, ராணி ஆகிய நாய்களை கொண்டு உரிமையாளரின் கட்டளை எவ்வாறு பின்பற்ற வைப்பது, தடையங்கள் கண்டுபிடிப்பது, மோப்ப தன்மையை குறித்து விளக்குவது, நாய்களை எப்படி வளர்ப்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நாய்கள் உரிமையாளருக்கு செயல்முறை விளக்கமாக தமிழக காவல்துறை மற்றும் ரயில்வே துறையினர் செய்து காட்டினர்.

    இதனை வருகை புரிந்த பொதுமக்கள் நாய்களின் உரிமையாளர்கள் மும்முரமாக கவனித்தனர். மேலும் நாய்களின் திறமையைக் கண்டு பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

    செய்தியாளர்: சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி