Home /News /local-news /

விழுப்புரம் : பொங்கல் தொகுப்பு வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

விழுப்புரம் : பொங்கல் தொகுப்பு வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

People flocking to buy Pongal package items at fair price shops

People flocking to buy Pongal package items at fair price shops

தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பை அனைத்து நியாய விலை கடைகளிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை அனைத்து நியாய விலை கடைகள் மூலம் வழங்கி வருகிறது தமிழக அரசு.

    கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு டோக்கன் அடிப்படையில் நாளொன்றுக்கு 100 முதல் 150 பேர் வரை என, ரேஷன் கடைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், இந்த 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுமக்கள் நியாயவிலை கடைகளில் கூட்டமாக நின்று பொங்கல் தொகுப்பினை பெற்று செல்கின்றனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Vijay R
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி