Home /News /local-news /

விழுப்புரம்: மண்பானை வாங்க ஆர்வம் காட்டவில்லை - வியாபாரிகள் வேதனை

விழுப்புரம்: மண்பானை வாங்க ஆர்வம் காட்டவில்லை - வியாபாரிகள் வேதனை

people

people Not interested in buying clay pot's -merchants are upset 

பொங்கல் வைப்பதற்கு முக்கிய பொருளாக விளங்குவது மண்பானை தான். ஆனால், பொதுமக்கள் மண்பானை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    விழுப்புரம் : மண்பானை வாங்க ஆர்வம் காட்டவில்லை-வியாபாரிகள் வேதனை

    பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தை திருநாளாகும். புத்தாடை உடுத்தி, வீடு முழுக்க ஒரே அலங்காரம் தோரணமாய் காட்சியளிக்கும். உறவினர்கள் என வீடுகளில் சிரிப்பு சத்தத்துடன் கொண்டாடும் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. உற்றார் உறவினர்களுடன் சந்தோஷமாக வீட்டில் அல்லது விளைநிலத்தில் மகிழ்ச்சியுடன் மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.

    இதுபோன்ற பல இன்பங்கள் சூழ்ந்த திருநாளாம் தைத்திருநாள்.
    ஆனால் தற்போது உலகமே தொழில்நுட்பத்தால் இயங்கி வருவதால், தமிழ் பாரம்பரியம் கலாச்சாரம் போன்ற எதிலும் தற்போது பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை என்று வேதனைப்படுகிறார்கள். எல்லோரும் ஏதோ பின்பற்ற வேண்டும் என்ற நினைப்பில் கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறார்கள். முழுமையாக யாரும் பின்பற்றவில்லை. தற்போது, முறைப்படி யாரும் கொண்டாடுவதும் இல்லை, ஆர்வத்தை காட்டுவதும் இல்லை.

    தற்போது பொங்கல் வைப்பதற்கு முக்கிய பொருளாக விளங்குவது மண்பானை தான். ஆனால், பொதுமக்கள் மண்பானை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும் வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே எளிமையாகவும் சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங்களில் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். ஆகையினால், மண்பானை வியாபாரிகள் தற்போது எங்களுக்கு எந்த ஒரு வியாபாரம் நடக்கவில்லை, லாபம் ஏதும் வரவில்லை என கவலை அடைந்துள்ளனர்.

    தற்போது, தொற்றுக் காலங்கள் என்பதால் பொதுமக்கள் அதிக விமர்சையாக பண்டிகையை கொண்டாடுவது ஆர்வம் காட்டுவதில்லை. போன வருடம் போல் இந்த வருடம் எந்த ஒரு வியாபாரமும் இல்லை என கூறுகிறார்கள்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி