Home /local-news /

விழுப்புரம்: அழகு நாச்சியம்மன் கோயிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வேண்டுதல்

விழுப்புரம்: அழகு நாச்சியம்மன் கோயிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வேண்டுதல்

விழுப்புரம்:

விழுப்புரம்: அழகு நாச்சியம்மன் கோயிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வேண்டுதல்

விழுப்புரம் காணை மெயின் ரோட்டில் அமைந்துள்ள அழகுநாச்சி அம்மன் கோயிலில் இன்று உள்ளூர் திருவிழா நடைபெற்று வருகிறது.

    பொங்கலின் தொடர்ச்சியாக பல ஊர்களில் உள்ளூர் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கோயில்களில் பொங்கலிட்டும், அங்கப்பிரதட்சணம் செய்தும் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

    அதுபோல விழுப்புரம் காணை மெயின் ரோட்டில் அமைந்துள்ள அழகுநாச்சி அம்மன் கோயிலில் இன்று உள்ளூர் திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு மாம்பழப்பட்டு, கருங்காலி பட்டு, காங்கேயனூர், பள்ளியந்தூர், சென்னகுணம், பெரும்பாக்கம் போன்ற பல ஊர்களில் இருந்து இந்த கோயிலுக்கு வருகை புரிவார்கள். இந்த கோயில் முழுவதும் மக்கள் கூட்டமாக ஜெகஜோதியாக இருக்கும்.ஆனால், தற்போது ஒமைக்ரான், கொரோனா போன்ற தொற்று பரவி வருவதால், மக்களின் கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமியை வழிபட்டு அவர்களின் நேர்த்தி கடன்களை செலுத்தி வருகின்றனர்.அடி பிரதட்சிணம், அங்க பிரதட்சணம், பொங்கல் வைத்து வழிபாடு செய்வது, சிறப்பு பூஜைகள் என பல்வேறு வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.பொதுமக்கள் வருகை புரிந்து அழகுநாச்சி அம்மனை வழிபட்டு மகிழ்ச்சியாக பூஜை செய்து செல்கின்றனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Vijay R
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி