Home /local-news /

உடல் முழுவதும் மிளகாய் பொடி அபிஷேகம்.. கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுட்ட பக்தர்கள்!

உடல் முழுவதும் மிளகாய் பொடி அபிஷேகம்.. கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுட்ட பக்தர்கள்!

உடல்

உடல் முழுவதும் மிளகாய் பொடி அபிஷேகம்..

Villupuram : அலகு குத்திக்கொண்டும், கொதிக்கும் நெய்யில் வடை சுட்டு அந்த வடைகளை எண்ணெய்சட்டியில் இருந்து வெறும் கையாலேயே எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பங்குனி உத்திர திருவிழாவை பக்கதர்கள் மிக விமரிசையாக கொண்டாடினர். பல பகுதிகளில் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்தும், தேர்வு இழுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதேபோல, பங்குனி உத்திர திருவிழாவையொட்டி விழுப்புரத்தை அடுத்த பில்லூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோயில் உள்ளது. இந்தகோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    அதுபோல் இந்த ஆண்டு 38ஆம் ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் சிலர் அலகு குத்திக்கொண்டும், கொதிக்கும் நெய்யில் வடை சுட்டு, அந்த வடைகளை எண்ணெய் சட்டியில் இருந்து வெறும் கையாலேயே எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இது போன்று நூதன முறையில் பக்தர்கள் சிலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை கூடியிருந்த பக்தர்கள் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்தனர். பின்னர் இந்த வடைகளை, பக்தர்கள் 100 முதல் 500 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.

    கதிர்வேல் முருகன் கோயில்:

    அதேபோல், முத்தாம்பாளையம் ஏரிக்கரையில் மிகவும் பிரசித்தி பெற்றகதிர்வேல் முருகன் கோயில் உள்ளது. பக்தர்கள், தங்களது உடலில் அலகு குத்தியும், உடம்பில் கொக்கி போட்டு டாடா ஏஸ் (குட்டி யானை) போன்ற வாகனங்களை இழுத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    மேலும், விழுப்புரம் அகரம்பாட்டை முத்தோப்பில் உள்ள பாலமுருகன் கோயிலில், பங்குனி உத்திர திருவிழாவான இன்று கற்பூர அபிஷேகமும், உடல் முழுவதும் மிளகாய் பொடி கரைசலை ஊற்றி அபிஷேகம் என பல்வேறு அபிஷேகங்கள் பக்தர்களுக்கு நடைபெற்றது. இதனைக் காண்டுகளித்த திரளான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Murugan, Temple, Villupuram

    அடுத்த செய்தி