Home /local-news /

விழுப்புரம் : விவசாய நிலத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் எண்ணெய்  கசிவு

விழுப்புரம் : விவசாய நிலத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் எண்ணெய்  கசிவு

விழுப்புரம் : மின்மாற்றியில் எண்ணெய்  கசிவு - பொதுமக்கள் அச்சம்

விழுப்புரம் : மின்மாற்றியில் எண்ணெய்  கசிவு - பொதுமக்கள் அச்சம்

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்துக்கு உள்பட்ட குப்பம் என்ற கிராமத்தில், விவசாய விளை நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சார டிர?

    விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்துக்கு உட்பட்ட குப்பம் என்ற கிராமத்தில், விவசாய விளை நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து ஆயில் தொடர்ந்து கசிந்துவருகிறது.

    காணை குப்பத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாலும், குழந்தைகள் சிறுவர்கள் அடிக்கடி தெருவில் ஓடி விளையாடுவது என தெரு முழுவதும் எப்போதும் சிறுவர்களின் நடமாட்டம் காணப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திடீரென இந்த மின்மாற்றியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு வருகிறது . மேலும் இந்த டிரான்ஸ்ஃபார்மரில் அடிக்கடி தீப்பொறி ஏற்படுகிறது. இந்த தீப்பொறி காரணமாக, குறைந்த மின் அழுத்தம் அப்பகுதியில் ஏற்படுகிறது.

    இதனால், விவசாய மின் இணைப்புக்கான மின் மோட்டார்கள் இயக்கப்பட முடியாமல், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திடீரென, ஏற்பட்டுள்ள இந்த எண்ணெய் கசிவால் ஏதேனும் விபரீதம் ஏற்படுவதற்கு முன், உடனடியாக சரி செய்யுமாறு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

    Published by:Vijay R
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி