கோடைகாலம் தொடங்கிவிட்டாலே சாலை ஓரங்களில் ஆங்காங்கே இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை விற்பனை செய்வது வழக்கம்.அந்த வகையில் தற்போது விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளில் நுங்கு விற்பனை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயிலால் பொதுமக்கள் அதிகளவில் வெளியில் வருவதற்கு பயந்து வீட்டினுள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். அப்படியே வந்தாலும் வெயியில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கு குளிர்ச்சியான பழங்கள், பழரசங்கள் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டுள்ளனர். குளிர்ச்சியான பழச்சாறுகள், பழங்கள், குளிர்பானங்கள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில் பொதுமக்கள் அதிக அளவில் கற்றாழை பழச்சாறு, மோர், கூழ் ஆகிய உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் பொதுமக்கள் நுங்கினை தேடித்தேடிச் சென்று வாங்கி சாப்பிடுகிறார்கள்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நுங்கு சாப்பிட இதில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.இதன் காரணமாக நுங்கு, விற்பனை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக உடலுக்கு குளிர்ச்சியும், சக்தியும் அளிக்கும் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. விழுப்புரம் நகரின் முக்கிய சாலையோரங்களில் நுங்குகளை குவியலாக வைத்து ஏராளமானோர் விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு நுங்கில் 3 கண்கள் வரை இருக்கும். 2 நுங்குகள் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு கண்கள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் அதிக அளவில் நுங்கு விற்பனை காணப்படுகிறது. பங்குகளை வாங்குவதற்கு பொது மக்கள் அலை மோதிக் கொள்கின்றனர்.
கோடைக்காலம் என்றாலே நுங்கு விற்பனை பழச்சாறு விற்பனை அதிகரித்து, அவற்றுக்கென தனி மவுசு ஏற்படுத்தும்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.