Home /local-news /

விழுப்புரத்தில் ஹோலி பண்டிகையை ஜாலியாக கொண்டாடிய வடமாநிலத்தவர்!

விழுப்புரத்தில் ஹோலி பண்டிகையை ஜாலியாக கொண்டாடிய வடமாநிலத்தவர்!

North

North people's celebrates Holi in Villupuram !!

Holi in Villupuram  : விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள அமராவதி விநாயகர் கோயில் அருகே, 100க்கும் மேற்பட்ட வடமாநிலத்தினர் இணைந்து வண்ணப் பொடிகளை தூவியும், முகத்தில் பூசியும் ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

    இந்தியாவில் அனைத்து மக்களும் இணைந்து கொண்டாடும்பண்டிகைகளில் வண்ணங்களில் திருவிழாவான ஹோலி பண்டிகை முக்கியமான ஒன்றாகும். சாதி, மத, இனம், மொழி பேதம் இன்றி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இந்த பண்டிகை அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வடமாநிலங்களை சேர்ந்த நபர்கள் ஹோலி பண்டிகையை ஒரு வாரம் வரை கொண்டாடுகின்றனர்.

    இந்த பண்டிகை, தற்போது தமிழகத்தில் குறிப்பாக இளைஞர்களால் அதிக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களிடையே மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே இந்த பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

    பல வழிமுறைகளில் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராணக் கதைகள் உண்டு. பண்டிகையின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வண்ண பொடிகளை வானில் தூவியும், முகத்தில் பூசியும் மகிழ்ச்சியை தெரிவிப்பர்.

    இந்த நிலையில் விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள அமராவதி விநாயகர் கோயில் அருகே, 100க்கும் மேற்பட்ட வடமாநிலத்தினர் இணைந்து வண்ணப் பொடிகளை தூவியும், முகத்தில் பூசிக்கொண்டு ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர் . மேலும் பெண்கள் அனைவரும் வட்டமிட்டபடி கைகள் கோர்த்துக் கொண்டு நடனம் ஆடினர். இந்தி பாடல்களுக்கும் உற்சாகமாக நடனம் ஆடினார்கள்.

    மேலும் பிறந்த ஒரு வருடத்திற்குள் உள்ள குழந்தையை, அந்தக் குழந்தையின் தாய்மாமன் மடியில் உட்கார வைத்து, மூங்கிலால் ஆன குச்சிகளை கொண்டு அந்த இருவரின் தலையின் மீது பிடித்துக்கொண்டு தாளம் அடிப்பார்கள். அச்சயமத்தில் மற்றவர்களுக்கு கொப்பரை தேங்காய், கற்கண்டு போன்ற இனிப்பு வகைகளை வழங்குவார்கள்.

    இந்த முறையானது ஹோலி பண்டிகையின் போது குழந்தைக்கும் தாய்மாமனுக்கு உள்ள உறவை குறிப்பதாகும். அதன் பின் அவர்களுக்கு காப்புக்கயிறு கட்டப்படும். சிரித்த முகங்களில் வண்ணப்பொடியை பூசியும், கட்டி அனைத்தும் ஹோலி பண்டிகை வட மாநில மக்கள் விமரிசையாகக் கொண்டாடினார்கள்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Holi, Villupuram

    அடுத்த செய்தி