Home /local-news /

சிறையில் தலைகீழாக பறந்த தேசியக்கொடி : சமூக வலைத்தளங்களில்  வைரலாகும் புகைப்படம் 

சிறையில் தலைகீழாக பறந்த தேசியக்கொடி : சமூக வலைத்தளங்களில்  வைரலாகும் புகைப்படம் 

National flag flying upside down in prison: Photo goes viral on the social media

National flag flying upside down in prison: Photo goes viral on the social media

Villupuram மாவட்ட சிறைச்சாலையில் தேசியக் கொடியை தலைகீழாக பறந்து கொண்டிருக்கும் புகைப்படம்  இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் தேசியக் கொடி தலைகீழாக பறந்து கொண்டிருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    விழுப்புரம் அருகே வேடம் பட்டு என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் சிறைத்துறை அமைச்சராக இருந்தபோது விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலை கட்டி திறக்கப்பட்டது.

    இந்த சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட சிறை கைதிகள் தண்டனையில் உள்ளனர் . இந்நிலையில் நேற்று காலை சிறைச்சாலையில் உள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை சிறை காவலர்கள் தலைகீழாக ஏற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் இக்கொடியை பறக்க விட்டு சென்ற சிறைக்காவலர்கள் இந்த செயலை கவனிக்காததால்,அந்த வழியாக வந்த பொது மக்கள், மாவட்ட சிறைச்சாலையில் தலைகீழாக பறந்துகொண்டிருக்கும் தேசியக்கொடியை படமெடுத்து இணையதளங்களில் பதிவு செய்ய தொடங்கினர்.

    இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் தொடர்புகொண்டு தெரியப்படுத்திய நிலையில், சிறைச்சாலையில் உள்ள தேசியக்கொடியை அவசரமாக கீழே இறக்கி நேராக பறக்க விட்டிருக்கின்றனர். இருப்பினும் இப்புகைப்படம் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி