விழுப்புரத்தை அடுத்த கூவாகத்தில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் திருநங்கைகள் கலந்துகொண்டு கோவில்பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். தொடர்ந்து, நாளை மறுநாள் (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
திருநங்கைகளுக்கான நிகழ்ச்சிகள் இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள்மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் மலேசியா,சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானதிருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.
இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும், நேற்றுமாலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ்கட்டுப்பாட்டு சங்கம், விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும்கட்டுப்பாட்டு அலகு, சென்னை திருநங்கை தலைவர்கள் (நாயக்குகள்) அமைப்புமற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கூவாகம் திருவிழா என்ற தலைப்பில்திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பாடலுக்கேற்ப நடனமாடிஅசத்தினார்கள்.
அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக மற்ற திருநங்கைகள் நடனம் ஆடினார்கள். அதன் பிறகு திருநங்கைகளின் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் கல்வி, வேலைத்தளங்களில் உள்ள திருநங்கைகளின் அணிவகுப்பு நடந்தது.அதனை தொடர்ந்து மிஸ் திருநங்கை அழகிப்போட்டிக்கான தேர்வு நடந்தது. இதில்சென்னை, சேலம், ஈரோடு, மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம், நாமக்கல், தஞ்சாவூர்,தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில்மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.
இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம்செய்தனர். இப்போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவணை ஆகியவற்றின்அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 50 பேர் 2-ம் சுற்றுக்குதேர்வு செய்யப்பட்டனர்.அதன் பின்னர் 2-ம் சுற்றுக்கான அழகிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 50பேரும் மீண்டும் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர்.
தமிழ் கலாச்சாரம், நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில்5 பேர் 3-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் மிஸ் திருநங்கையாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக இவர்கள்3 பேருக்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், பொது அறிவுத்திறன்குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறந்த முறையில் பதில் மூன்று நபர்களை தேர்வு செய்தனர்.
மிஸ் திருநங்கையாக சென்னையைச் சேர்ந்த சாதனா என்பவரும், இரண்டாம் இடத்தை சென்னையைச் சேர்ந்த மதுமிதாவும்,3-ம் இடத்தை சென்னையை சேர்ந்த எல்சாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மற்ற திருநங்கைகள் இதே போன்ற அடுத்த வருடமும் நாங்கள் இந்த போட்டிக்கு தயாராவோம் என்று கூறினார்கள்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.