Home /local-news /

விழுப்புரம் : சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் : சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

Villupuram: Minorities people can apply for loans

Villupuram: Minorities people can apply for loans

விழுப்புரத்தில் சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு தொழில் செய்வதற்குரிய கடன், கல்வி கடன் என பல திட்டங்களில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    தமிழ்நாடு அரசு தாழ்த்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மையினர் போன்ற மக்களுக்கு பல உதவிகள், அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது.

    அதுபோல விழுப்புரத்தில் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு தொழில் செய்வதற்குரிய கடன், கல்வி கடன் என பல திட்டங்களில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தை பயன்படுத்தி கடன் பெறுபவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வேறுபட்டு வருகிறது.

    அதில் நகர்ப்புறத்தில் இருந்து விண்ணப்பிப்பவரின் ஆண்டு வருமானம் 1.20 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும். அதே போல் கிராமப்புறத்தில் இருந்து விண்ணப்பிப்பவரின் ஆண்டு வருமானம் 98,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

    திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவித வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக 20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவித பெண்களுக்கு 6 சதவித வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக 30 லட்ச ரூபாயும் கடனாக வழங்கப்படுகிறது.

    கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவித பெண்களுக்கு 4 சதவித வட்டி விகித்தில் அதிகபட்ச கடனாக 10 லட்ச ரூபாயும் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு 1 லட்ச ரூபாயும் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

    திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவித பெண்களுக்கு 6 சதவித வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு 1.50 லட்சரூபாய் கடன் வழங்கப்படுகிறது.

    மேலும் சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை,முதுகலை படிப்பில் தொழிற்கல்வி,தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் 20 லட்ச ரூபாய் வரையிலும் 3 சதவித வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவித மாணவியர்களுக்கு 5 சதவித வட்டி விகிதத்திலும் 30 லட்ச ரூபாய் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

    மேலும், விண்ணப்பிக்க வருபவர்கள் அவரவரின் மதிப்பிற்குரிய சான்றும், ஆதார் அட்டை, வருமான சான்றிதழ் ,இருப்பிடச் சான்றிதழ் , மேலும் எந்த தொழில் கடன் பெற விரும்பினால் என முழு விவரங்களும் அடங்கிய தொகுப்பு, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) ஆகிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

    கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bona fide certificate ) கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் உடன் எடுத்து வர வேண்டும்.

    இதற்காக விண்ணப்பிக்க வருபவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அலுவலகத்திலோ, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Loan, Villupuram

    அடுத்த செய்தி