விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில், 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவில் மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, ஆட்சியர் மோகன் தலைமையேற்று மினி மாராத்தான் போட்டியினை துவக்கி வைத்து பங்கேற்றனர்.
இந்த மினி மாராத்தான் போட்டியில், கல்லூரி, பள்ளிகளைச் சேர்ந்த 270 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்த மினி மாராத்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம், எல்லிஸ் சத்திரம் வழியாக இ.எஸ்.கார்டன் வழியே சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நிறைவடைந்தது.
சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக பொதுமக்கள் கண்டு உணரும் வண்ணம் இந்த மினி மராத்தான் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மினி மாராத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாவட்ட அட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள். மினி மாராத்தான் போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவி அனைவருக்கும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த மாரத்தான் போட்டி மூலம் மாணவ மாணவிகளிடம் பொறுமையும், மாணவிகளின் ஆற்றல் திறன் மேம்பாட்டிற்கும் உதவும் எனவும், அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற நிகழ்ச்சி மாணவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தையும் தருகிறது என்று கூறிய மாவட்ட அட்சியர், மாணவ-மாணவிகள் இதுபோன்ற பல்வேறு போட்டிகளில் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.