விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கடல் நீர் உட்புகுந்ததால் 3 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கியது. இதனால் வாழ்வாதாரம் பாதிப்படைந்திருப்பதாக உப்பளத் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நடக்கும் உப்பு உற்பத்தியில் தூத்துக்குடிக்குமுதல் இடம் என்றால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் இரண்டாவது இடம் பிடித்து உப்பு உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது.
இங்கு 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் மரக்காணம் கடல் பகுதியில் ஏற்பட்ட கடும் கடல் சீற்றம் காரணமாக, முகத்துவாரம் வழியாக கடல் நீர் உட்புகுந்து 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் உப்பளங்கள் பாதி நீரில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கிறது.
கோடை கால துவக்கமான தற்போது உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், கடல் நீரால் உப்பளங்கள் மூழ்கியிருப்பதால் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதனால் உப்பளத் தொழிலாளர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.