Home /local-news /

மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டாவை இனி விழுப்புரத்தில் வாங்கலாம்...

மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டாவை இனி விழுப்புரத்தில் வாங்கலாம்...

Madurai

Madurai Special Bun parotta is currently available in Villupuram.

Madurai Bun Parotta | விழுப்புரம் ரயில்வே ஜங்ஷனில் உள்ள ருசி பிரியாணி ஹோட்டலில் மதுரை பன் பரோட்டா ஸ்பெஷலாக தயார் செய்யப்படுகிறது.

    மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டா தற்போது விழுப்புரத்தில் கிடைக்கிறது..

    தமிழகத்தில் பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று தான் பரோட்டா. கறி பரோட்டா, வீச்சு பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, பொறிச்ச பரோட்டா, மட்டன் பரோட்டா என பல வகைகள் இதில்உண்டு.இவற்றில்மதுரை பன் பரோடா மிகவும் பிரபலம் வாய்ந்ததாக மாறியுள்ளது,

    மதுரையில் பல உணவு வகைகள் ஃபேமஸாக இருந்தாலும், பன் பரோட்டாவுக்கு என தனி மவுசு இருக்கிறது. பல ஊர்களில் இருந்தும் மதுரைக்குமக்கள் தேடிச் சென்றுபன் பரோட்டாவை ருசித்துவிட்டு செல்கிறார்கள். மதுரை ஸ்பெஷலான பன் பரோட்டாவை சாப்பிட இனி மதுரைக்கு செல்ல வேண்டாம். நம்ம விழுப்புரத்திலேயே சாப்பிடலாம்.

    விழுப்புரம் ரயில்வே ஜங்ஷனில் உள்ள ருசி பிரியாணி என்றஹோட்டலில் மதுரை பன் பரோட்டா ஸ்பெஷலாக தயார் செய்யப்படுகிறது.இந்த பன் பரோட்டா பார்ப்பதற்கு பன் போல உப்பி காணப்படும். மிகவும் மென்மையாக பஞ்சு போலவும் இருக்கும்.

    தற்போது இந்த பரோட்டாவிற்கு விழுப்புரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்கிறார் கடையின் உரிமையாளர் ஆனந்தன். இந்த பன் பரோட்டாவிற்காக மதுரையிலிருந்து தனியாக மாஸ்டர் வரவைக்கப்பட்டு,அவர் மூலமாக இந்த பரோட்டா தயார் செய்யப்படுகிறது.

    ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 கிலோ மாவை பரோட்டோவிற்கு பயன்படுத்துகிறோம். இந்த 30 கிலோ பிசைந்து வைத்த மாவில் இருந்து குறைந்த பட்சம் 700 முதல் 800 பரோட்டாக்கள் செய்ய முடியும் என்கிறார் பரோட்டா மாஸ்டர். ஒரு செட் பன்பரோட்டா 30 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த பரோட்டாவை வாங்கி சாப்பிடுவதற்குவிழுப்புரம் மற்றும் சுற்றுப்புற மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள், பெரியவர்கள் அதிக அளவில் வருகை புரிகிறார்கள். மேலும் ஹோட்டலில் சாப்பிடுவதை விட அதிக அளவில் பார்சல்கள் தான் வெளியில் செல்கிறது என கூறுகிறார் கடையின் உரிமையாளர் ஆனந்தன்.

    மேலும் இந்த ஸ்பெஷல் பன் பரோட்டா மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை இங்கு கிடைக்கிறது. மேலும் இந்த ஹோட்டலில் தயார் செய்யப்படும் பன் பரோட்டா சாப்பிடுவதற்கு என தனியாக வாடிக்கையாளர் கூட்டமும் உருவாகிதினமும் வந்து செல்கிறார்கள்.

    பன் புரோட்டாவின் சுவை சூப்பராக இருப்பதால் இளைஞர்கள் அதிக அளவில் இதனை வாங்கி செல்கின்றனர் மேலும் மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்கின்றனர். விழுப்புரம் வாங்க பன் பரோட்டாவை சுவைத்து பாருங்க என கூறுகின்றனர்இக்கடையின் வாடிக்கையாளர்கள்...

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Food, Villupuram

    அடுத்த செய்தி