விழுப்புரம் திருவிக வீதியீல் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜெயஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆண்டு தோறும் பங்குனி 27 முதல் சித்திரை மாதம் 7 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நவமியன்று எலக்ட்ரிக் விமான வீதியுலாவும், 11ம் தேதி சந்திரபிரபை, 12ம் தேதி கோபிகாஸ்திரிகளுடன் பின்னக்கிளை மற்றும் 13ம் தேதி நாகன வாகன வீதியுலா நடந்தது. தொடர்ந்து, நேற்று 14ம் தேதி சித்திரை வருடப்பிறப்பையொட்டி, கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அகல்விளக்கேற்றி சுவாமி வழிபாடு செய்தனர்.
லட்சதீப கருடசேவை காட்சி நடந்தது. இதை தொடர்ந்து, 15ம் தேதி இந்திர விமானம், 16ம் தேதி முத்துப்பல்லக்கு, 17ம் தேதி குதிரை வாகனம், 18ம் தேதி புஷ்ப பல்லக்கு காட்சி நடந்தது. இதையடுத்து, 19ம் தேதி தெப்போற்சவமும், 20ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடந்தது.
இரண்டு ஆண்டுகள் பிறகு இத்திருவிழா நடைபெறுவதால் பல பகுதிகளிலிருந்து, திருவிழாவிற்கு பல கடை வியாபாரிகள், பொதுமக்கள் வருகை புரிந்தனர். தெப்ப உற்சவத்தை பொது மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.
மேலும் இன்னிசை பாட்டுக் கச்சேரி நடைபெற்றது இதில் இது பாடகர் வேல்முருகன் கலந்து கொண்டார். இந்த பாட்டு கச்சேரி காண்பதற்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.