உலகம் முழுவதும் உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தாக்குதலால்பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது, இதனால் வர்த்தக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படும் அடிப்படை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதையடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் .
விழுப்புரம் மாவட்டத்தின் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் பின்வருமாறு:
நேற்றும் இன்றும் விழுப்புரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் தான் உள்ளது.
விழுப்புரம்
பெட்ரோல்–112.39, டீசல்– 102.44
செஞ்சி
பெட்ரோல்– 112.25, டீசல்– 102.30
மரக்காணம்
பெட்ரோல்– 112.07, டீசல்– 102.12
திண்டிவனம்
பெட்ரோல்– 112 , டீசல்–102.06
விக்கிரவாண்டி
பெட்ரோல்– 112.29 ,டீசல்–102.35
மேலும் வருகிற காலங்களில் பெட்ரோல் விலை இன்னும் உயருமா? குறையுமா? என்ற அச்சத்தில் உள்ளனர் வாகன ஓட்டிகள்.
அதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது மட்டுமல்லாமல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சிலிண்டர் விலை - 977.50 காசுகள் உயர்ந்து விற்பனைக்குள்ளது.
இது போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.