Home /local-news /

ஆபத்து நிறைந்த காமாட்சி அம்மன் விளக்கு தயாரிப்பு முறை.. ஒரு நேரடி விசிட்...

ஆபத்து நிறைந்த காமாட்சி அம்மன் விளக்கு தயாரிப்பு முறை.. ஒரு நேரடி விசிட்...

70

70 types of kamatsiyamman lamps to decorate in puja Production Secret League!

Kamatchi Lamps Production | விழுப்புரம் அடுத்த சாலை அகரத்தில் நேர்த்தியாக  காமாட்சி அம்மன் விளக்கு தயாரிக்கப்பட்டு வருகிறது.இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    பூஜையில் அலங்கரிக்கும் 70 வகையான காமாட்சி விளக்குகள் தயாரிப்பு ரகசியம் லீக்! மெய்சிலிர்க்கும் கைவினை..!!

    விழுப்புரம் அடுத்த சாலை அகரத்தில் நேர்த்தியாக காமாட்சி அம்மன் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இந்த வேலையை மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள் அங்கு பணிபுரியும் பணியாளர்கள்.

    பாண்டிச்சேரி, கடலூர், இதனை அடுத்து விழுப்புரத்தில் சாலை அகரத்தில் மட்டும் தான் காமாட்சி அம்மன் விளக்கு தயாரிக்கப்படுகிறது. இங்கு 70க்கும் மேற்பட்ட வகையான காமாட்சி அம்மன் விளக்கு அச்சுகள் உள்ளன. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 400 விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. விளக்கு தயாரிப்பு பற்றி அதில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளி ராஜேஷ் கூறுகையில், காமாட்சி விளக்கு தயாரிப்புக்கு முதலில் தேவைப்படும் முக்கியமானது \"உழவு மண் \" என்ற மண் ரகம் தான்.

    இந்த மண்ணை முதலில் பதப்படுத்தி தண்ணீர் தெளித்து நேர்த்தியாக விளக்குக்கு தயாரிக்கப்படும் அளவிற்கு மண்ணை தயார் நிலையில் வைக்க வேண்டும், அதன் பிறகு மரப் பெட்டியில், எந்த விளக்கு தேவைப்படுகிறதோ அந்த விளக்கின் அச்சை வைத்து, அதன் பிறகு அந்த உரை மண்ணை அதில் நிரப்ப வேண்டும். அதன்பிறகு அந்த மரப் பெட்டியில் இரண்டு சிறிய துவாரம் இருக்கும். ஒருபுறம் விளக்கு தயாரிப்புக்கு, மரப் பெட்டிகளை மண் நிரப்பி தயார் நிலையில் இருக்கும், மற்றொருபுறம் பித்தளை துண்டுகளை நெருப்பில் போட்டு பாகு தயாரிக்கும் முறையும் சென்று கொண்டிருக்கும்.  சுட சுட நெருப்புக் குழம்பை மரப்பெட்டியில் தெரியும் துவாரம் வழியாக ஊற்றுவார்கள்.

    அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அந்த மரப் பெட்டி திறந்து பார்த்து அந்த மண்ணைக் கீழே கொட்டுவார்கள். சூடு தணிந்த பிறகு அந்த விளக்கை நீண்டு இருக்கும் அந்த துண்டை கட் செய்து, மறுபடியும் அந்த பித்தளையை பயன்படுத்துவார்கள்.

    உற்பத்தி ஆகும் அம்மன் விளக்கு, பக்கத்தில் இருக்கும் பாலிஷ் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்குதான் காமாட்சி அம்மன் விளக்கு பளபளப்பாக தோற்றமளிக்கும் அளவில் பாலிஷ் செய்யப்படுகிறது. பாலிஷ் செய்யும் நபர்கள் விளக்கின் அளவை பொறுத்து விலை நிர்ணயம் செய்து மற்ற பகுதிக்கும் உள்ளூர் பகுதிக்கும் அனுப்புகிறார்கள்.  தேனி, கம்பம்,திருவண்ணாமலை, நாமக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு விளக்குகள் அனுப்பப்படுகிறது.

    பல சிக்கல்களும், அபாயம் நிறைந்த இந்த வேலையை மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள் வேலையாட்கள். ஒவ்வொரு விளக்கு தயாரிப்புக்கு பின்பும் பணியாளர்களின் கஷ்டமும், உழைப்பும் உள்ளது என பணியாளர்கள் கூறுகின்றனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி