Home /local-news /

விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கான கபடி உடற்தகுதி தேர்வில் சலசலப்பு - முற்றுகை போராட்டம்

விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கான கபடி உடற்தகுதி தேர்வில் சலசலப்பு - முற்றுகை போராட்டம்

 district level Fitness test for kabaddi competition for school students 

 district level Fitness test for kabaddi competition for school students 

Villupuram : விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற, கபடி போட்டிக்கான உடற்தகுதி தேர்வில், அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் சரியான முறையில் தேர்வு நடைபெறவில்லை என கூறி பெற்றோர்கள் முற்றுகையிட்டு வாக்குவதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும் ...
    விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற, கபடி போட்டிக்கான உடற்தகுதி தேர்வில், அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் சரியான முறையில் தேர்வு நடைபெறவில்லை என்றும் கூறி பெற்றோர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவதத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக, விளையாட்டு மாணவர் விடுதிகளில், அரசு சலுகைகள் உடன் இலவசமாக 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயில்வதற்கு வருடந்தோறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக , விளையாட்டு போட்டித் தேர்வு வைத்து, அதில் மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரனோ தொற்று காரணமாக மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் மாணவ மாணவிகளுக்கான தேர்வு இந்தாண்டு நடைபெற்று வருகிறது. கபடி போட்டிக்கான தேர்வு விழுப்புரம் கிழ்பெரும்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் நேற்று நடைபெற்று வருகிறது.

    இங்கு நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர்,விருதுநகர்,உள்ளிட்ட 38 மாவட்டங்களை சார்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கபடி விளையாட்டு தேர்வுக்காக விழுப்புரம் விளையாட்டு அரங்கிற்கு  உடற்கல்வி தேர்ச்சிக்கு வருகை புரிந்தனர்.

    இந்நிலையில் மாணவர்களுக்கு நடைபெறும் உடற்தகுதி தேர்வில், தற்போது பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்க தகுதியுடையவர்கள் என கூறி , பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு தகுதி இல்லை என விளையாட்டு தேர்வு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பாதிக்கபட்ட மாணவர்கள், பெற்றோர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு தேர்வு நடத்த கோரிவாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து கண்துடைப்பிற்காக உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த மாணவர்களுக்கு குடிநீர் வசதி, உணவு வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும், பள்ளி மாணவர்களை கொளுத்தும் வெயில் விளையாட்டு மைதானத்தில் நீண்ட நேரம் அமரவைக்கப்பட்டு உடற்தகுதி தேர்வினை அதிகாரிகள் நடத்தியதால் மாணவர்கள் உடல் அளவில் சற்று சோர்வாக காணப்பட்டார்கள்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Kabali, School students, Villupuram

    அடுத்த செய்தி