ஹோம் /Local News /

தமிழக அரசின் ‘சிறந்த திருநங்கை’ விருது பெற்று அசத்திய விழுப்புரம் மர்லிமா முரளிதரன் - ‘பிறருக்காக வாழ்வதே சிறந்த வாழ்வு முறை’ என நெகிழ்ச்சி

தமிழக அரசின் ‘சிறந்த திருநங்கை’ விருது பெற்று அசத்திய விழுப்புரம் மர்லிமா முரளிதரன் - ‘பிறருக்காக வாழ்வதே சிறந்த வாழ்வு முறை’ என நெகிழ்ச்சி

X
‘சிறந்த

‘சிறந்த திருநங்கை’ விருது

Villupuram : தமிழக அரசின் சிறந்த திருநங்கை என்ற விருதிற்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை மர்லிமா முரளிதரன் தேர்வு செய்யப்பட்டார். இவ்விருது அனைத்து திருநங்கைகளிடமும்  ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மாநில அளவில் பல மாவட்டங்களிலிருந்து போட்டி போட்ட சிறந்த திருநங்கை என்ற விருதிற்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை மர்லிமா முரளிதரன் என்ற திருநங்கை தேர்வு செய்யப்பட்டார். இவ்விருது அனைத்து திருநங்கைகளிடமும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என பொதுமக்கள் கூறினார்கள்.

தமிழக அரசு சார்பில் சிறந்த திருநங்கைக் காண விருது சமூக நலத்துறை சார்பில் கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்காக தமிழகத்தில் பல்வேறு திருநங்கைகள் விண்ணப்பித்தனர். இந்தசிறந்த திருநங்கை என்ற விருது பெற தமிழக அரசாங்கம் சில தகுதிகள் இருக்கவேண்டுமம் என கூறினார்கள்.

அது என்னவென்றால், அரசாங்கத்தின உதவி பெறமால் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியாக இருந்திருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது இதுபோன்ற தகுதியின் அடிப்படையில், தலைமைசெயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சிறந்த திருநங்கையாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மர்லிமா முரளிதரன் 2022)க்ககான சிறந்த திருநங்கையாக தேர்வுசெய்யப்பட்டார்.

இந்த விருதை கடந்த 18-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையால் வழங்கப்பட்டது. இதனுடன் ஒரு லட்சம் ரூபாய் காசோலையையும் வழங்கி பாராட்டினார். செஞ்சி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த மர்லிமா 25 வருடமாக சிவீல் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

இவ்விருதினை குறித்து சிறந்த திருநங்கையான மார்லிமா கூறுகையில், நான் இந்த விருதை பெற்றது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இவ்விருதினை அளித்த முதலமைச்சர் மற்றும் சமூக நலத்துறை, திருநங்கை உறுப்பினர்கள், என்னை ஆதரவளித்த என் குடும்பம், என்னுடைய சக திருநங்கைகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் எனவும் , என் குடும்பம் இல்லை என்றால் நான் இந்த அளவிற்கு வந்து இருக்க மாட்டேன். நான் என்னால் முடிந்த உதவிகளை என்னைப் போன்று இருக்கும் திருநங்கைகளுக்கு உதவி செய்து வருகிறேன்.

அதாவது என்னுடன் இருக்கும் 70-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்கும், விவசாய பணிகள் மேற்கொள்ளவும், பழச்சாறு கடை மற்றும் கோழிப் பண்ணைகள் மற்றும் கால்நடைகள் பண்ணைகள் வைப்பதற்கும், சுயத்தொழில் மேற்கொள்வதற்கும், படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கித் தருவது, வீடு கட்டுவதில் தேவைப்படும் ஆலோசனைகளும், மேலும் பொருளாதார ரீதியாகவும் கஷ்டப்படும் திருநங்கைகளுக்கு எந்த உதவியாக இருந்தாலும் செய்து தருகிறேன் எனவும் நமக்காக வாழாமல் பிறருக்காக வாழ்வதே சிறந்த வாழ்வு முறை ஆகும் எனவும், இவ்விருது எனக்கு பெரும் ஊக்கத்தையும், தைரியத்தையும் தந்துள்ளது.

என்னால் முடிந்தவரை நான் மற்றவர்களுக்கு உதவி செய்து வருவேன். திருநங்கைகள் என்று கூறினாலே, பொதுமக்கள் பார்க்கும் பார்வை தற்போது மாற்றி அமைக்கும்படி பல திருநங்கைகள் செயல்பட்டு வருகிறார்கள், பல்வேறு துறைகளிலும், சுயதொழில் மேற்கொள்வதிலும் திருநங்கைகள் சிறந்து விளங்குகிறார்கள். அதுபோல மேன்மேலும் திருநங்கைகள் வளர்வதற்கு உறுதுணையாக இருப்பேன்.

மேலும் திருநங்கைகளுக்கு முதல் ஆதரவு அவரவர் குடும்ப உங்கள் கொடுத்தாலே திருநங்கைகள் இது வேண்டுமானாலும் சாதிப்பார்கள். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு திருநங்கையும் சுய தொழில் செய்வது அவர்களுடைய கௌரவம் ஆகும். சுய தொழில் செய்வதே நமக்கு மரியாதையும் மதிப்பும் வாங்கித்தரும் என மர்லிமா மற்ற திருநங்கைகளுக்கு, முன்னுதாரணமாகவும் நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் கூறினார்.

செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

First published:

Tags: Transgender, Villupuram