விழுப்புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலைக்கல்லூரியும்,
விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையமும், புதுச்சேரி கலை அறிவியல் தொழில்நுட்பஆய்வு மையமும் இணைந்து டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத்துறை மாணவிகளுக்குதொல்லியல் பட்டய சான்றிதழ் படிப்பு அளித்து வருகிறது.
அதன் ஒரு அங்கமாக வரலாற்று மாணவிகளுக்கு தொல்லியல் பொருட்களை நேரடியாக காண்பித்து, பாடம் சொல்லி தருவதற்கு,வரலாற்று ஆர்வலரும் விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர்வீரராகவன், அவரது மனைவியார் மங்கையர்கரசி, தொல்பொருள் கண்காட்சிபயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்தி கண்காட்சியாக வடிவமைத்தனர்.
இந்த கண்காட்சியை பார்த்த வரலாற்றுத் துறை மாணவிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இந்த கண்காட்சியில் 20 லட்சம் ஆண்டுகள் முந்தைய கடல் வாழ் உயிரினங்களில் பாஸில்ஸ், புதிய கற்கால கருவிகள்,பழைய கற்கால கருவிகள், நடுக்கல், சிலைகள்,மண்பாண்டங்கள், தாழிகள்,ஓலைச்சுவடிகள்,இரும்பு கருவிகள் என அனைத்து வகையான தொல்லியல் பொருட்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.
மேலும் இந்த கண்காட்சி பற்றி வரலாற்றுத் துறை இரண்டாம் ஆண்டு பயிலும் கீதா கூறுகையில், இந்த கண்காட்சியில் தமிழ் எழுத்துக்கள் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது, பழமைவாய்ந்த பல்லவர் கால சோழர் கால கல்வெட்டுகள் குறித்து தெரிந்து கொண்டோம், பழமையான தடையங்கள் என அனைத்தும் அறிந்து கொண்டதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
மேலும் இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை எங்களுடைய படிப்பில் ஈடுபடுத்திக்கொள்வது சிறப்பாக இருந்தது நாங்களும் இது போன்ற பல தடயங்களை கண்டு பிடிப்போம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் கீதா.
இதனை கல்லூரி முதல்வர் கணேசன், வரலாற்றுத்துறை தலைவர் ரேணுகாம்பாள் மற்றும்அனைத்து பேராசிரியர்கள், வரலாறு மற்றும் அனைத்துத்துறை மாணவிகளும்பார்வையிட்டு, வரலாற்று புகழையும் பெருமையையும் அறிந்து கொண்டனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.