Home /local-news /

தமிழர்களின் தெய்வம் மூ(த்த)தேவி... வரலாறும் உண்மையும்.!

தமிழர்களின் தெய்வம் மூ(த்த)தேவி... வரலாறும் உண்மையும்.!

The historical truth of the elder goddess Moodevi, the deity of the hidden Tamil

Villupuram District | விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர்கால மூத்த தேவி,லகுலீசர் சிற்பம்  கண்டறியப்பட்டுள்ளது 

    விழுப்புரத்தில் இருந்து மாம்பழப்பட்டு செல்லும் சாலையில் நன்னாடு என்ற கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் விழுப்புரம் வரலாறு பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர், இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால மூத்ததேவி, லகுலீசர் சிற்பங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.

    ஜேஷ்டாதேவி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை, மூதேவி , லட்சுமி போன்ற பெயர்களும் உண்டு. இவர் விஷ்ணுவின் மனைவியும் லட்சுமி தேவியின் மூத்த சகோதரியும் ஆவார். 'மூதேவி' என்றால், மூத்த தேவி என்று அர்த்தம் . தவ்வை, சேட்டை, கேட்டை, மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு.இவர் ஜேஸ்டா தேவி' என்று தற்போது வணங்கி வரப்படுகிறார் .வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். (மூத்த தேவி என்ற பொருள்படும் மூதேவி என்ற சொல் தற்போது வசைச்சொல் போல மருவியுள்ளது)

    புராண காலங்களில் போருக்குச் செல்வதற்கு முன் வீரர்கள் அனைவரும் மூத்த தேவியை வழிபட்டு, ஆசீர்வாதம் பெற்று செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

    இச்சிற்பம் பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் மூத்த தேவி தனது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோருடன் அமர்ந்த நிலையில் அழகுற காட்சி அளித்தும், காக்கை கொடியும் காட்டப்பட்டுள்ளது. மூத்த தேவி சிற்பத்தின் இடது புறத்தின் கீழே செல்வக் குடம் காட்டப்பட்டுள்ளது. அதன் மீது தனது இடது கையை தேவி வைத்திருக்கிறார் மூத்த தேவி. மேலும் இச்சிற்பம் பலகை கல்லில் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளது.

    இச்சிற்பத்தை பற்றி எழுத்தாளர் செங்குட்டுவன் கூறுகையில், இதுநாள் வரை இக்கிராம மக்கள் இந்த சிற்பத்தை ஆண் தெய்வமாக முனீஸ்வரன் என்று வணங்கி வந்தனர். ஆனால் இது பெண் தெய்வம் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல், இச்சிற்பம் பல்லாவரத்தில் வழிபட்ட மூத்த தேவி  என்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினோம்.

    அதுமட்டுமல்லாமல், அதே கிராமத்தின் இன்னொரு பகுதியில் முனீஸ்வரன் என்று அழைக்கப்பட்டும், வணங்கப்பட்டும் வருகிற சிற்பத்தை காண சென்றிருந்தோம் . அங்கு சென்ற பிறகு தான் அது பல்லவர் காலத்தில் வழங்கப்படும் லகுலீசர் சிற்பம் என தெரியவந்தது. இச்சிற்பம் பலகைக் கல்லில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

    மேலும் இந்த சிற்பத்தை குறித்தும், பல்லவர்கால சிற்பமா என உறுதிப்படுத்த கல்வெட்டு ஆய்வாளர்கள் வீரராகவன், மங்கையர்க்கரசி இருவரையும் தொடர்பு கொண்டு பேசியபோது, இச்சிற்பம், விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு, கண்டமானடி கிராமங்களில் உள்ள லகுலீசர் சிற்பங்களை போலவே இந்த சிற்பத்தின் தோற்றம் ஒத்திருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், லகுலீசர் பாசுபத சைவத்தினை தோற்றுவித்தவர் ஆவார் .

    விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் லகுலீசர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது என எழுத்தாளர் செங்குட்டுவன் கூறினார். அதுமட்டுமல்லாமல் இது போன்ற வரலாற்றுத் தடயங்களை பொதுமக்கள் மற்றும் அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி