ஹோம் /Local News /

ஹைடெக் வசதிகளுடன் கூடிய அரசு மகளிர் பள்ளி - மிரளும் தனியார் பள்ளிகள்

ஹைடெக் வசதிகளுடன் கூடிய அரசு மகளிர் பள்ளி - மிரளும் தனியார் பள்ளிகள்

X
விழுப்புரம்

விழுப்புரம் அரசு மகளிர் பள்ளி

Villupuram District | தனியார் பள்ளிக்கு நிகராக விழுப்புரம் அரசுப் மகளிர் பள்ளியின் கட்டமைப்பு,  கல்வி முறை இருப்பதால்,  சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருக்கிறது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஹைடெக் வசதிகளுடன் தெறிக்கவிடும் அரசு பள்ளி - மிரளும் தனியார் பள்ளிகள்

தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளியின் கட்டமைப்பு, கல்வி முறை இருப்பதால், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருக்கிறது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

விழுப்புரம் திருவிக வீதியில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பயில்கின்றனர்.

விழுப்புரத்தில் சுற்றுவட்டப் பகுதியில் இருந்த பல மாணவிகள் வருகை புரிகின்றனர்.

இப்பள்ளியின் இயற்கை எழில் சூழ்ந்த பள்ளி வளாகம்,ஹடெக் வசதிகள், ஸ்மார்ட் கிளாஸ், டிஜிட்டல் நுாலகம், தரமான விளையாட்டு அரங்கம், வேலை வாய்ப்பு தொடர்பான பயிற்சிகள், மருத்துவ ஆலோசனைகள், ஆங்கில மொழி பெயர்ச்சி, நீட் சிறப்பு பயிற்சி, கலை மற்றும் கைத்தொழில், இசை சார்ந்த பயிற்சி வகுப்புகள், தரமான அறிவியல் ஆய்வகம், ஹைடெக் கணினி ஆய்வகம், மூலிகை பண்ணை, தொழிற்கல்விக்கு அட்டல் டிங்கரிங் லேப், கணித ஆய்வகம்,நூலகம்,சி.சி.டி.வி., காமிராக்கள், ஆரோ குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, குறைதீர் கற்பித்தல், பையோ மெட்ரிக் வருகை பதிவேடு உள்ளிட்ட வசதிகள் பல வசதிகள் உள்ளது.

இப்பள்ளியில் தற்போது125 ஆசிரியர்கள் மற்றும் 8 ஒப்பந்த ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியின் ஆசிரியருக்கும் மாணவிகளுக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் கோரிக்கைகள் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் மாணவர் மனசு எனும் புகார் பெட்டியில் போடுவார்கள். இதனை தலைமையாசிரியர் மற்றும் இதர ஆசிரியர்கள் கவனித்து அந்த குறைகளை நிவர்த்தி செய்வார்கள்.

மேலும் பள்ளிக்குள் நுழையும் முன்பே கரும்பலகையில் நம்பிக்கை ஊட்டும் வகையில் வாசகங்கள் தினமும் எழுதி வைக்கப்பட்டு வருகிறது. இதனை பள்ளி மாணவர்கள் ஆசிரியரை பள்ளிக்குள் நுழைகிறார்கள். மேலும் இப்பள்ளியில் இந்த வருடம் 10 மாணவிகள் நீட் தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இச்செயல் இப்பள்ளிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இப்பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் 12 மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்வு செய்யப்பட்டு மாதம் 1,000 ரூபாய் வீதம் ஒவ்வொரு நபரும் 48,000 பெற்று தந்துள்ளனர். இப்பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் 3 குறுங்கோள்களை கண்டு பிடித்து உள்ளனர். இதற்கான பயிற்சிகளை இன்டர்நேஷனல் அஸ்டிராய்ட் சர்ச்சிங் குலஆபரேஷன் (IASC) மூலம் பெற்றனர்.

இதுபோன்ற பல சாதனைகளையும் மாணவிகள் படைத்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளி பெற்றோர்களின் மத்தியில் நல்ல இடத்தை பெற்றுள்ளது.

இந்த பள்ளி வளாகத்தை குறித்தும், கல்வி முறை குறித்தும் மாணவிகள் கூறுகையில் இப்பள்ளியில் படிப்பதற்கு எங்களுக்கு பெருமையாகவும், கர்வமாக இருக்கிறது எனவும், தனியார் பள்ளிகளுக்கு சமமாகவும், விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒரு முன்மாதிரி பள்ளிக்கூடமாக இருப்பதால்தான் இப்பள்ளிக்கு மாதிரி பள்ளி என வைத்துள்ளார்கள் என்று பள்ளி மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

மேலும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியை சசிகலா கூறுகையில, அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும், செய்து தருவதில் ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருகிறார்கள். மாணவிகளின் பாதுகாப்பு படிப்பு போன்ற அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

அதுமட்டுமல்லாமல் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பள்ளி மாணவியர் சேர்க்கை எண்ணிக்கை கூடியுள்ளது.மேலும் பல திட்டங்கள் அடுத்த ஆண்டில் செயல்படுத்த இருக்கிறோம் எனவும் , பள்ளி வளாகத்திலேயே மாணவிகளுக்கு கராத்தே சிலம்பம் போன்ற பயிற்சிகளையும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.

செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

First published:

Tags: Villupuram