ஓவியம் என்றாலே ஆர்வமும் வியப்பும் அதிக அளவில் ஏற்படும். அதனால் ஓவியம் வரைவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடைய அதிக அளவில் காணப்படுகிறது. இது போன்ற கலை ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஓர் சிறப்பான செய்தி.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தன்று ஓவிய பயிற்சி பட்டறை நடத்திடவும், அதில் வெற்றி வாகை சூடிய ஓவியங்களை கொண்டு, சென்னையில் மாநில அளவிலான கலைக்கண்காட்சி நடத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்ஓவியப்பயிற்சி முகாம்களில் மரபுசார்ந்த ஓவியங்கள் துணி ஓவியங்கள், கண்ணாடி ஒவியங்கள், பேப்பர் ஒவியங்கள்,பானை மரம் ஓவியங்கள், வாட்டர் கலர் ஒவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்கள் போன்ற பல்வேறு வகையான ஓவியங்கள்இடம்பெறாலம் என அறிவுறுத்தபடுகிறது.
மேலும் இந்த ஓவிய முகாம் , விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாளை 24-04-2022 (ஞாயிற்று கிழமை) அன்று காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் பிற்பகல் 3.00 மணிக்கு மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்பபடுத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறவுள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்படும்.
மேலும் கலந்து கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி பொருட்கள், பயிற்சி சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். ஆகையினால் இந்த அரிய வாய்ப்பினை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலையார்வமிக்க மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக் கொண்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்கள்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.