செஞ்சி வார ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி 6 கோடி வரை ஆடுகள் விற்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் நடைபெறும். இந்த வாரச்சந்தை மிகவும் பிரபலம் பெற்றதாகும். குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் அனுப்பப்படுகிறது.
இவைகள் இயற்கையான தழைகளை மேய்ந்து வளர்க்கப்படுவதால் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் அதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள். ஆகையினால் இந்த செஞ்சி வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக மக்களிடம் கருதப்படுகிறது.
இந்நிலையில் வார ஆட்டு சந்தையான அதிகாலை 2 மணி முதலே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் செஞ்சி வார சந்தைக்கு வருகை புரிய தொடங்குவார்கள். மேலும் விற்பனைக்காக சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர்.
குறிப்பாக வருகின்ற மே 2-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை சுமார் 6 கோடிகளுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.