செஞ்சி அருகே பருவநிலை மாற்றம் காரணமாக, 500 ஏக்கர் பரப்பளவில் மாம்பழ விவசாயத்தில் தேளியா பூச்சி தாக்கம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அஞ்சாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி அஹமத். இவர் கடந்த 20 ஆண்டுகளாக 20 ஏக்கர் பரப்பளவில் மாம்பழ விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக அல்போன்சா, பங்கனப்பள்ளி, பேனிஷா, நீலம், ஒட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்களை அறுவடை செய்யப்பட்டு சென்னை, திருச்சி மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்தாண்டு அதிக பருவ மழை பெய்ததாலும், தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக குறிப்பாக காலை நேரங்களில் கடும் பனி பொழிவும் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கமும் மாறி வருவதால் மாம்பழ விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேளியா என்ற பூச்சி காரணமாகவும் பூ முதல் காய் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாம்பழ விவசாயிகள் கூறுகையில், 20 ஆண்டுகளாக மாந்தோப்பு பராமரித்து வருவதாகவும் வழக்கமாக ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் வரை மட்டுமே பூக்கள் வரும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பூக்கள் வந்து கொண்டிருக்கின்றது.
மேலும் ஒரே மரத்தில் துளிர் இலைகளும், பூக்கள் , மா பிஞ்சுகள் மற்றும் மாங்காய் என அனைத்தும் காணப்படுவதால்,பூச்சிகள் தாக்கப்பட்ட இடத்தில் மருந்து தெளிக்கும் போது பல்வேறு பாதிப்பும், சிக்கல்களும் ஏற்படுகிறது. ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே மருந்து தெளிக்கும் நிலையில் தற்போது 6 முறைக்கு மேல் மருந்து தெளிக்க வேண்டிய நிலைமை வந்துள்ளது.
மேலும், மாம்பழ பராமரிப்பில் 1 லட்சத்திற்கு மேலாக செலவினங்கள் ஆவதாகவும், செஞ்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல இடங்களில், அதாவது சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் மாந்தோப்புகளில் இதே நிலைமை உள்ளதாக, மாம்பழ விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்தப் பூச்சு தாக்கம் ஏற்பட்டால் , மரத்திலுள்ள பூக்கள் கருகி, இலை மற்றும் மா பிஞ்சுகளில் கரும்புள்ளிகள் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சி தாக்கம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல விளைச்சல் இருந்தும் விற்பனை செய்ய முடியாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும், தேளியா பூச்சு தாக்கத்தினாலும்,மா விவசாயம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே வேளாண் துறை அதிகாரிகள், இதற்கான நாம் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.