ஹோம் /Local News /

தொழில் முனைவோராக மாற விரும்பும் பெண்மணியா? இலவச பயிற்சி குறித்து தெரிந்து கொள்ளுங்கள்..

தொழில் முனைவோராக மாற விரும்பும் பெண்மணியா? இலவச பயிற்சி குறித்து தெரிந்து கொள்ளுங்கள்..

இலவச

இலவச தொழில் பயிற்சி

Villupuram District: பள்ளி, கல்லூரி மாணவிகள் முதல் கணவனை இழந்த பெண்கள் வரை சுயதொழில் முனைவோர்களாக மாற வழிகாட்டுகிறார்கள் இந்தியன் ஊரக வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையைக் குறைக்கும் நோக்கில், ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கல்வி அறக்கட்டளை, சிண்டிகேட் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகியவை இணைந்து 1982 ஆம் ஆண்டு கர்நாடகாவில் தர்மஸ்தலா அருகே "ஊரக வளர்ச்சி மற்றும் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம்" என்பதை அதன் சுருக்கமான RUDSETI ஐ உருவாக்கி ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொண்டது.

  வேலையில்லாத இளைஞர்கள் சுயதொழில் முயற்சிகளைத் தொடங்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் இந்த மாதிரியின் வெற்றியை உணர்ந்த பிறகு, நாடு முழுவதும் RUDSETI வகை பயிற்சி நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் இந்த முயற்சி விரிவுபடுத்தப்பட்டது.

  கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs) எனப்படும் பிரதி நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள அந்தந்த முன்னணி வங்கிகளால் மாவட்ட அளவில் நிறுவப்பட்டுள்ளன. இவை வங்கிகளால் நிறுவப்பட்ட, சொந்தமான மற்றும் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள்.

  இந்த வங்கியின் நோக்கங்கள்,மாற்றுத் தொழிலாக சுயதொழிலை மேற்கொள்ள இளைஞர்களை அடையாளம் காணவும், திசைதிருப்பவும், ஊக்கப்படுத்தவும், பயிற்சியளிக்கவும், உதவவும்,வேலையில்லாத இளைஞர்களை வருமான ஆதாரமாக சுயதொழில் மேற்கொள்வதற்கான திறன்களை உருவாக்குதல்,கிராமப்புற தொழில் முனைவோரை ஊக்குவிக்க,அரசாங்கத்தின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்துதல்,கடன் இணைப்பு மற்றும் திறன் மேம்படுத்தல் பயிற்சியுடன் RSETI பயிற்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை எளிதாக்குதல்.

  தொழில்முனைவு மற்றும் கிராமப்புற மேம்பாடு துறையில் ஆலோசனை மற்றும் மேம்பாட்டை வழங்குதல்சமூக மேம்பாடு மற்றும் நிதி உள்ளடக்கிய திட்டங்களின் பங்குதாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

  மேலும் ஒவ்வொரு மாதமும் புதுப்புது பயிற்சி வகுப்புகள் நிறுவப்பட்டு அதில் பல தொழில் முனைவோர்களை உருவாக்குவது இந்த இந்தியன் ஊரக வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்.

  அதுபோல இந்த பயிற்சி நிறுவனத்தில் பெண்களுக்கு என தையல் பயிற்சி எம்பிராய்டரி மற்றும் துணி ஓவியம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது இது விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதியிலிருந்து பெண்கள் வருகின்றனர். கல்லூரிக்கு செல்லும் பெண்கள், கணவனை இழந்த பெண்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் என அனைவரும் இந்த பயிற்சி வகுப்பிற்கு வருகை புரிகிறார்கள்.

  இவர்களுக்கு அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படுகிறது. பயிற்சி வகுப்புக்கு உரிய உபகரணங்கள் மூன்று வேளை உணவு என முற்றிலும் இலவசமாக தரப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பயிற்சி வகுப்புக்குரிய பயிற்சியாளர்களை பல பகுதிகளிலிருந்து வர வைத்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

  தையல் பயிற்சிக்கு சிவரஞ்சனி என்ற பயிற்சியாளரும் (விழுப்புரம் ), எம்ப்ராய்டரி துணி ஓவியத்திற்கு அனுராதா என்ற பயிற்சியாளர் பாண்டிச்சேரியில் இருந்து வருகை புரிகிறார்கள்.

  மேலும் இந்த பயிற்சி வகுப்பு பற்றி வருகை புரிந்த பெண்கள் கூறுகையில், இந்தப் பயிற்சி வகுப்பு முற்றிலும் இலவசமாகக் கற்றுத் தருகிறார்கள். மூன்று வேளை தரமான உணவு அளிக்கப்படுகிறது. அந்தந்த பயிற்சி வகுப்புக்கு உரிய உபகரணங்கள் தரப்படுகிறது. எளிமையான முறையில் அனைத்து வகுப்புகளும் செய்யும் முறையாக புரியும்படி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

  பல பகுதிகளில் இருந்தும், கல்லூரி மாணவிகள், கணவனை கைவிட்ட பெண்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் என அனைவரும் வருகிறார்கள். இந்தப் பயிற்சி வகுப்பின் முடியும் தருவாயில் நாங்கள் நிச்சயமாக ஒரு தொழிலை வீட்டிலிருந்து மேற் கொள்ளும் அளவிற்கு எங்களை ஆயத்தபடுத்துகிறார்கள்.

  அதுமட்டுமல்லாமல் நாங்கள் தயாரித்த பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவக்குரிய பயிற்சிகளும் எங்களுக்கு அளிக்கப்படுகிறது. என மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

  செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

  Published by:Arun
  First published:

  Tags: Villupuram