Home /local-news /

விழுப்புரம் : பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளை கணிவோடு நடத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவுரை

விழுப்புரம் : பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளை கணிவோடு நடத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவுரை

கோப்பு படம்

கோப்பு படம்

Villupuram News | மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் வரும் துணையாளருக்கும் உரிய இலவச பயணச் சீட்டினை கண்டக்டர்கள் வழங்க வேண்டும்.

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக பல்வேறு உதவிகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்ய இலவச பயண சலுகை, தனி இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது துணையாளர் ஒருவருடன் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும் அரசு பேருந்து ஓட்டுனர், கண்டக்டர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு அறிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அட்டையின், அசல் அட்டை கொண்டு, 40 சதவீதம் மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் வருகை புரியும் துணையாளர்கள் ஒருவருக்கு, சாதாரண கட்டண நகர பேருந்துகளில் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் வரும் துணையாளருக்கும் உரிய இலவச பயணச் சீட்டினை கண்டக்டர்கள் வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட, அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுனர் , கண்டக்டர்கள்
    மாற்றுத்திறனாளிகள் பயணம் மேற்கொள்ள ஏதுவாக, தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள நெறிமுறைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள அவர்களுடன் ஒத்துழைப்பு கொடுத்து பயணம் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

    Published by:Vijay R
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி