விழுப்புரம் அடுத்த கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்,
சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களான பிரதீப் நாயர், தேஜஸ்வீ மருத்துவர்கள் இன்று விழுப்புரத்துக்கு வருகை புரிந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருதய பரிசோதனை செய்தனர்.
விழுப்புரம் மகாராஜபுரம் அடுத்த கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதியிலிருந்து நோயாளிகள் வருகை புரிகின்றனர். எப்பொழுதும் இந்த மருத்துவமனையில் கூட்டமாகவே இருக்கும். மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்குமிடையே ஒரு நல்ல புரிதல் இருக்கிறது.
இங்கு அடிக்கடி ஏதாவது விழிப்புணர்வு முகாம், நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கான முகாம், கர்ப்பிணி பெண்களுக்காக முகாம் என பல்வேறு நடவடிக்கைகள் இந்த மருத்துவமனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுபோல இன்று சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையை சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களான பிரதீப் நாயர்,தேஜஸ்வீ என இரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொண்டு, இன்று இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த இருதய முகாமில் சிறுவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் கலந்து கொண்டனர். முதலில் வருகை புரிந்த நோயாளிகளுக்கு ரத்த அழுத்த அளவு, சக்கரையின் அளவு பரிசோதித்த பிறகே ஈசிஜி பரிசோதனை செய்தனர்.
அதன் பின் எக்கோ echo )பரிசோதனை செய்தனர். அதன்பின் நோயாளியின் நிலைமை எந்த அளவிற்கு இருக்கிறது என அவர்களுக்கு அறிவுரைகளும், ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாம் மூலம் மருத்துவ காப்பீட்டுத்திட்டம் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் எனவும் நோயாளிக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இந்த இலவச முகாமிற்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதியிலிருந்து பொதுமக்கள் வருகை புரிந்து இருதய பரிசோதனை செய்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.