Home /local-news /

விழுப்புரம் : கலப்படக்காரர்களை கதிகலங்க வைக்கும்  'ஸ்பாட் டெஸ்ட்'   ஆரம்பம்!   

விழுப்புரம் : கலப்படக்காரர்களை கதிகலங்க வைக்கும்  'ஸ்பாட் டெஸ்ட்'   ஆரம்பம்!   

Food

Food safety officials began inspecting the food on the spot

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் எஃப்.எஸ்.ஓ ஸ்டாலின் ராஜரத்தினம், லேப் அனாலிசிஸ்ட் சரவணன் ஆகியோர் அடங்கிய குழு நடமாடும் வாகனம் மூலம்  அதிரடி ஆய்வை மேற்கொண்டனர்.

மேலும் படிக்கவும் ...
    விழுப்புரம் : கலப்படக்காரர்களை கதிகலங்க வைக்கும் 'ஸ்பாட் டெஸ்ட்' ஆரம்பம்!

    பொதுமக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல பொருட்களில் கலப்படம் நடக்கிறது. பல இடங்களில் உணவுப் பொருட்கள், தின்பண்டங்கள், மளிகைப் பொருட்கள், உணவகங்கள், பேக்கரிகள் போன்றவற்றில் விற்பனையாகும் பொருட்களின் தரமும் தன்மையும் சரியான முறையில் இருப்பதில்லை.

    முன்பெல்லாம், உணவுப்பொருட்களில் கலப்படம் இருக்கிறதா என்பதை மாதிரி( ஸாம்பிள்) எடுத்து பரிசோதனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபிறகே நடவடிக்கை எடுப்பார்கள்.

    ஆனால், தற்போது எந்த இடத்தில் உணவு மாதிரிகளை சேகரிக்கிறார்களோ அதே இடத்தில் நடமாடும் லேப் லேயே பரிசோதிக்கும் 'ஸ்பாட் டெஸ்ட்' எடுத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள். இது கலப்படக்காரர்களை கதிகலங்க வைத்திருக்கிறது.

    விழுப்புரத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், தள்ளுவண்டி கடைகள், பழக்கடைகள் போன்ற பல்வேறு கடைகளில் தரமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்தன.
    இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் எஃப்.எஸ்.ஓ ஸ்டாலின் ராஜரத்தினம், லேப் அனாலிசிஸ்ட் சரவணன் ஆகியோர் அடங்கிய குழு நடமாடும் வாகனம் மூலம் அதிரடி ஆய்வை மேற்கொண்டனர்.

    விழுப்புரத்தின் முக்கிய உணவகங்கள் பேக்கரி போன்ற இடங்களில் சரியான அளவில் இங்கு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என பரிசோதனை செய்து, அனைத்துப் பொருட்களும் சரியான அளவில் கலந்து தான் இந்த உணவு தயாரிக்கப்படுகிறது என பரிசோதித்து வருகின்றனர்.

    அதுபோல விழுப்புரத்தில் தலப்பாக்கட்டு, அர்ச்சனா, கேக் கார்னர், பாலமுருகன், முஹைய்தீன் போன்ற உணவகங்களில் மற்றும் பேக்கரியில் உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு, அவர்களுக்கு உணவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    அளவுக்கு அதிகமாக ஏதேனும் கலப்படம் இருந்தால் கடை உரிமையாளரிடம் கூறி இதுதான் சரியான அளவு என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினார்கள்.


    மேலும் தயாரிக்கப்படும் உணவுகளை நடமாடும் வாகனத்தில் (Mobile food lab on wheel ) எடுத்து வந்து லேப் அனாலிஸ்ட் மூலம் வாகனத்திலேயே உடனடியாக(SPOT TEST) பரிசோதனை செய்து கடை உரிமையாளர்களிடம் உணவு தரம், அளவு மற்றும் தன்மையை குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Manosoundar M
    First published:

    அடுத்த செய்தி