Home /News /local-news /

விழுப்புரம் :  பொங்கல் பண்டிகையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்வு

விழுப்புரம் :  பொங்கல் பண்டிகையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்வு

Villupuram:

Villupuram: Flower's rate high on pongal festival 

பொங்கல் திருநாளான இன்று பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அதிகளவில் பூக்களை வாங்குகிறார்கள். இதனால், நேற்றைவிட பூக்களின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

    பொங்கல் திருநாளான இன்று பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அதிகளவில் பூக்களை வாங்குகிறார்கள். இதனால், நேற்றைவிட பூக்களின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

    பண்டிகைக் காலங்கள் என்றாலே பூக்களின் விலை உச்சத்தைத் தொட்டு விடும். ஏனென்றால் வீடு முழுக்க அலங்கார தோரணங்கள், கோயில்களில் சிறப்பு பூஜைகள் என பூக்களால் அலங்கரித்து இருப்பார்கள். ஆகையினால் விஷேச காலத்தில் பூக்கள் என்றாலே ஒரு தனிச்சிறப்பு தான்.

    அதுபோல விழுப்புரத்தில் இன்று அதிக அளவில் பொதுமக்கள் பூக்களை வாங்குவதற்காக வருகை புரிந்து வருகிறார்கள். பூ வியாபாரியிடம் கேட்டபோது பூக்கள் விலை சற்று அதிகரித்துள்ளது. நல்ல முறையில் விற்பனை ஆகிறது என தெரிவித்தனர்.

    சாமந்தி ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், ரோஜா ஒரு கிலோ 240 க்கும், நந்தி வட்டம் - 130 க்கும், கனகாம்பரம் கிலோ 1,600 ரூபாய்க்கும், சம்மங்கி கிலோ 160 ரூபாய்க்கும், குண்டுமல்லி 1,600 ரூபாய்க்கும், அரளிப்பூ 400 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா கிலோ 220 ரூபாய்க்கும், ஜாதிமல்லி 1,600 ரூபாய்க்கும் ஆகி விலை நிலவரத்தில் இன்று பூக்கள் வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்களும் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்கு பூக்களை வாங்கி செல்கின்றனர். வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் விற்பனை செய்து வருகிறார்கள்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Vijay R
    First published:

    Tags: Pongal, Villupuram

    அடுத்த செய்தி