Home /local-news /

விழுப்புரம் : மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் தடுப்புப்  பயிற்சி முகாம்

விழுப்புரம் : மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் தடுப்புப்  பயிற்சி முகாம்

Farmers Training programme on Integrated Fall army worm management

Farmers Training programme on Integrated Fall army worm management

திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் முகையூர் வட்டாரம், வீரபாண்டி கிராமத்தில் விவசாயிகளுக்கான மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த படைப்புழு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

    விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு பயிற்சிகள் மற்றும் அரசின் மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    சமீபகாலமாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் காணப்படுவது வழக்கம்.

    இதைக் கட்டுப்படுத்த, திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் முகையூர் வட்டாரம், வீரபாண்டி கிராமத்தில் விவசாயிகளுக்கான மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த படைப்புழு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

    இந்த பயிற்சி முகாமில், மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த வீழ்ச்சி படைப் புழு மேலாண்மை, மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்பம் பற்றியும், மக்காச்சோளத்தில் நீர் மற்றும் உர மேலாண்மை, மக்காச்சோளத்தில் விதை தொழில்நுட்பங்கள் குறித்து விரிவுரை வழங்கப்பட்டது.

    மேலும், கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சேத அறிகுறிகள், படைப்புழுவின் வாழ்க்கைச் சுழற்சி, விதை நேர்த்தியின் முக்கியத்துவம், எல்லைப் பயிர்களை வளர்ப்பது, இயற்கை எதிரிகள், என்டோமோபடோஜெனிக் பூஞ்சைகள், பெரமோன் பொறி நிறுவுதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லியை சரியான நேரத்தில் தெளித்தல் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.

    இப்பயிற்சியில், திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய முதல்வர் முத்துகிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், உதவிப் பேராசிரியர்கள் நூர்ஜஹான், தங்கேஸ்வரி ஆகியோர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Vijay R
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி