Home /local-news /

இயற்கை வேளாண் முறையில் விளைந்த காய்கறிகள், நெல் ரகங்களை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் - மாவட்ட நிர்வாகம் உதவுமா?

இயற்கை வேளாண் முறையில் விளைந்த காய்கறிகள், நெல் ரகங்களை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் - மாவட்ட நிர்வாகம் உதவுமா?

Urging

Urging the district administration to assist in the procurement of natural paddy

Villupuram | இயற்கை விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள். ஆனால் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், நெல் ரகங்கள் போன்றவற்றை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள். இயற்கை விவசாயத்திற்கு கைகொடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

    விழுப்புரம் மாவட்டத்தில் 75 சதவீதம் மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் செய்வதேயாகும் . பல வழிகளில் விவசாயிகள் புதிய புதிய வழிமுறைகளை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    ரசாயனம் இல்லாமல் இயற்கையான முறையில் விவசாயம் செய்து, இயற்கை உணவை பொது மக்களுக்கு தரவேண்டும் என்பதே விவசாய மக்களின் நோக்கமாகும்.இயற்கை முறையில் காய்கறி சாகுபடி, பாரம்பரிய நெல் ரகம் பயிரிடுதல், ரசாயனம் செலுத்தாமல் விவசாயம் செய்வது போன்ற பல வழிமுறைகளை கொண்டு இயற்கை விவசாயத்தை கடைப்பிடித்து வருகின்றனர் விவசாயிகள்.

    அதுபோல, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செல்லும் வழியாக கஞ்சனூர் அடுத்த வேம்பி கிராமத்தில் இயற்கை நெல் ரகம் சாகுபடியில் களமிறங்கியுள்ளார் குமார் (62) என்ற விவசாயி. இவர் நான்கு வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். தற்போது அவர் ஒரு ஏக்கர் நிலத்தில் ஆற்காடு கிச்சிலி சம்பா என்ற நெல் ரகத்தை பயிரிட்டுள்ளார்.

    இந்த நெல் ரகத்தை சாகுபடி செய்யும் முறையை பற்றி விவசாயி குமார் கூறுகையில் ,இந்த நெல் ரகத்தின் வளர்ச்சி காலம் 135 நாளாகும். 145 நாளில் அறுவடை செய்யலாம். இந்த நெல் ரகத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால், நாற்றங்கால் நடவின் போது ஒரே ஒரு நாற்றை நடவு செய்தால், அது 30-லிருந்து 40 கிளைகள் கொண்டு வளரும் . இதுவே இந்த நெல் ரகத்தின் தனி சிறப்பாகும். இந்த நெல் ரகத்தினால் பெறப்படும் அரிசியை சாப்பிடுவதன் மூலம், சர்க்கரை நோய், மூட்டு வலி, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், செரிமான பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

    மேலும் இந்த நெல் ரகத்தில் இளைய பெண் என்ற பூச்சித் தாக்கம் காணப்படும். இந்த பூச்சி தாக்கம் ஏற்பட்டால் நெற்கதிர்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதனை சரிசெய்வதற்கு இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் அனைத்தும் ஒன்று சேர்த்து அரைத்து அதனை மாட்டு கோமியத்தில் கலந்து தெளித்தால் பூச்சித் தாக்கம், ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

    நெல் ரகம் நல்ல முறையில் வளர்வதற்கு வேப்பம் புண்ணாக்கு மற்றும் கடலை புண்ணாக்கு சேர்த்து தொழு உரமாக பயன்படுத்தி கொள்ளலாம். 45 நாட்களுக்குப் பிறகு ஜீவாமிர்தக் கரைசலை கலந்து வயலில் தெளிக்கலாம்.

    இதுபோன்ற பல வழிகளைக் இந்த நெல் ரகத்தில் கடைப்பிடித்தால் நிச்சயமாக நல்ல சாகுபடியும் நல்ல மகசூலும் ஈட்டலாம். ஆற்காடு கிச்சிலி சம்பா ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாங்கள் தற்போது இதனை உள்ளூர் விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகிறோம்.

    அதுமட்டுமல்லாமல், விவசாயிகளான நாங்கள் இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு ஆர்வமாக தான் இருக்கிறோம். இயற்கை முறையில் சத்தான உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு தர வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாகும் ஆனால் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளுக்கும், நெல் ரகத்தையும் கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு எந்த வேறுபாடும் இல்லாமல் தவித்து வருகிறோம்.

    ஒரு சில நாட்களில் இயற்கை அரிசி திருவிழா போன்ற போன்ற பாரம்பரிய நெல் திருவிழாவில் நாங்கள் அதனை விற்பனை செய்கிறோம்.

    ஆனால், மட்டன் நெல் ரகத்தை கொள்முதல் செய்வது போல இயற்கை முறையில் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக நின்று இதற்கு ஒரு வழி காட்ட வேண்டுமென ஒட்டுமொத்த இயற்கை விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

    மாவட்ட நிர்வாகம் நாங்க விளைவித்த இயற்கை பொருட்களை விற்பனை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் உதவி புரிந்தால், நிச்சயமாக நஞ்சில்லா உணவை நாங்கள் தருவோம் என குமார் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒட்டு மொத்த இயற்கை விவசாயிகள் கோரிக்கையாக கோரிக்கை வைத்தார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Organic Farming, Villupuram

    அடுத்த செய்தி