Home /local-news /

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் - விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்க கோரிக்கை

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் - விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்க கோரிக்கை

விவசாயிகள் திடீர் சாலை மறியல்

விவசாயிகள் திடீர் சாலை மறியல்

Villupuram District | விக்கிரவாண்டி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் கொண்டு சென்ற பொருட்களுக்கு உரிய பணம் கிடைக்காததால் விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர்  திடீரென, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும் ...
    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் கொண்டு சென்ற பொருட்களுக்கு உரிய பணம் கிடைக்காததால் விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் திடீரென, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விக்கிரவாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த தானிய பயிர்களான உளுந்து, கம்பு, கேழ்வரகு, சோளம், மணிலா போன்ற பயிர்களும் நெல் போன்றவையும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

    ஆனால் சமீப காலங்களாக, அங்கு கொண்டு செல்லும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்த நிலையில், நேற்று கம்பு, கேழ்வரகு, மணிலா போன்றவை விக்கிரவாண்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு சென்றனர். ஆனால், விவசாயப் பொருட்கள் மிகவும் குறைவான விலைக்கு செல்வதால், விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, விவசாயிகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், சென்னை திருச்சி நெடுஞ்சாலையில், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விவசாயிகளுடன் சமதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், விவசாயிகள் கொண்டு வந்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததின் பேரில், விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Farmers, Farmers Protest, Villupuram

    அடுத்த செய்தி