Home /local-news /

விழுப்புரம் : விவசாயிகளை சிறப்பிக்கும் வகையில் பொங்கலிட்டு சிறப்பு செய்த விவசாயி

விழுப்புரம் : விவசாயிகளை சிறப்பிக்கும் வகையில் பொங்கலிட்டு சிறப்பு செய்த விவசாயி

Villupuram

Villupuram : A farmer celebrate the Pongal festival 

விவசாயிகளை சிறப்பிக்கும் வகையில் விழுப்புரம் விவசாயி முருகேசன் பொங்கலிட்டு விவசாயிகளுக்கு உணவு மற்றும் புடவை வழங்கி பொங்கலை சிறப்பித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விழுப்புரத்தில் விவசாயிகளை சிறப்பிக்கும் வகையில் விவசாயி முருகேசன் பொங்கலிட்டு விவசாயிகளுக்கு உணவு மற்றும் புடவை வழங்கி பொங்கலை சிறப்பித்தார்.

    விழுப்புரம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் தன்னுடைய நிலத்திற்கும், வளர்ச்சிக்கும் அரும்பாடுப்பட்ட விவசாய தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையிலும், அறுவடை நல்லமுறையில் வரவேண்டும் என்ற நோக்கிலும் தன்னுடைய நிலத்தில் வேலை செய்த அனைவருக்கும் மற்றும் மற்ற விவசாயிகளுக்கும் ஏதேனும் ஒரு வகையில் அவர்களை சிறப்பிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பொங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    விவசாய நிலத்தில், அனைத்து விவசாய தொழிலாளர்களையும் வரவைத்து ஒன்றாக இணைந்து பொங்கலிட்டு, சாமியை வழிபட்டு பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
    பின்பு வருகை புரிந்த அனைத்து விவசாய பெண்மணிகளுக்கு உணவு மற்றும் புடவை வழங்கினர்.

    செய்தியாளர் : சு. பூஜா -விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Pongal, Villupuram

    அடுத்த செய்தி