விழுப்புரம் அரசு பள்ளி மாணவர்களிடையே மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மதுவிலக்கு டி.எஸ்.பி. ராஜபாண்டி தலைமையிலான போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சமீப காலங்களாக பள்ளி வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் மாணவிகள் மது போதையிலும், தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல பகுதிகள் பல சம்பவங்கள் மாணவர்கள் அரங்கேற்றி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் மது போதை, பான்மசாலா, குட்கா, கஞ்சா போன்றவைகளுக்கு அடிமையாகி வருவதால் அதனை தடுக்கும் விதமாக தமிழக காவல் துறை சார்பில் பல்வேறு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விழுப்புரம் மதுவிலக்கு காவல் துறை சார்பில் வழுதரெட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழுப்புரம் மாவட்ட டி.எஸ்.பி. ராஜபாண்டி தலைமையில் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மதுவிலக்கு டி.எஸ்.பி. ராஜபாண்டி பள்ளி மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாக கூடாதெனவும் தங்கள் பகுதிகளில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்யப்பட்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் சிறுவயதிலேயே போதைக்கு அடிமையாக கூடாதென வலியுறுத்தினார்.
மேலும், பள்ளி மாணவர்கள் ஆடைகளை இறுக்கமாக அணிய கூடாதெனவும், முடியை சரியான முறையில் வெட்டிகொண்டு பள்ளிக்கு வருகை புரிய வேண்டுமென தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பள்ளி மது போதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்து இலவசமாக நோட்டுக்களை வழங்கினர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Drug addiction, School students, Villupuram