Home /local-news /

விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி - முழு விவரம்

விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி - முழு விவரம்

மாதிரி படம்

மாதிரி படம்

Villupuram Hockey Tournament 2022 | 2021-2022 ஆம் ஆண்டிற்கான விழுப்பரம் மாவட்ட அளவிலான ஆடவர்களுக்கான ஹாக்கி லீக் விளையாட்டுப்போட்டி, விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

மேலும் படிக்கவும் ...
    மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழுப்புரத்தில் நாளை மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற இருக்கிறது.

    நமது தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டு குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஆர்வத்தினை ஏற்படுத்திடும் நோக்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகளை நடத்தி வருகின்றது.

    அதன்படி 2021-2022 ஆம் ஆண்டிற்கான விழுப்பரம் மாவட்ட அளவிலான ஆடவர்களுக்கான ஹாக்கி லீக் விளையாட்டுப்போட்டி, விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்போட்டிகள் லீக் போட்டியின் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும்.

    இதில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. 16 வீரர்களைக் கொண்ட (ஆண்கள்) அணியாக மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் முதல் இரு இடங்களில் வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.

    இப்போட்டியில் முதலிடம் பெறும் அணி, மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

    இப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் அணிகள் தங்களது நுழைவு விண்ணப்பத்தினை இன்று அனுப்பிட வேண்டும். நுழைவு விண்ணப்பம் அனுப்பாத அணிகள் இப்போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்க இயலாது. மேற்கண்ட போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ (அ.பே.எண்:7401703485) தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

    எனவே இளைஞர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு, ஹாக்கிப் போட்டியின் மகத்துவத்தை தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Hockey, Villupuram

    அடுத்த செய்தி