விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு செய்முறைவிளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பேரிடர் மேலாண்மை உலக பாதுகாப்பு மற்றும் வேலையின்போது சுகாதாரம் தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்மீட்பு பணிகள் துறை, வனத்துறை ஆகியவை இணைந்து பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு செய்முறை விளக்க நிகழ்ச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் அனைவரும் இந்த செயல் முறை விளக்க நிகழ்ச்சி ஆர்வமாக கண்டுகளித்தனர்.
இந்த செயல் முறை விளக்க நிகழ்ச்சியில் மரம் முறிந்து வாகனத்தில் விழுந்து விபத்து ஏற்படும்போது அதில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, தீ விபத்தின்போது உயரமான கட்டிடங்களில் சிக்கியவர்களை எப்படி உடனடியாக மீட்பது, கிணற்றுக்குள் விழுந்தவர்களையும் எவ்வாறு கயிறு மூலம் மீட்பது, சமையல் எண்ணெய்யால் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்படும் போது அதை எப்படி அணைப்பது, கியாஸ் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறுஅணைப்பது, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பதுகுறித்து தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
அதுமட்டுமல்லாமல் தீ விபத்தில் சிக்கியவர்களை எந்த முறையில் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், ஆண்களாக இருந்தால் எப்படியும் பெண்களாக இருந்தால் எப்படி தூக்க வேண்டும் எனவும் செய்து காட்டினார்கள்.
வீட்டில் கேஸ் சிலிண்டர் வாசனை என்றால் முதலில் பயப்படாமல் எந்த பொருட்களையும் தொடாமலும் ஓடாமலும், மெதுவாக சிலிண்டரின் பட்டனை ஆப் செய்தால் மட்டுமே போதும் எனவும், உடனே நெருப்பு வந்தாலும் ஏதாவது ஒரு பக்கெட், கம்பளி போன்றன கொண்டு மூட வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினார்கள்.
மேலும் இந்த செயல்முறை விளக்கத்தினை பொதுமக்கள் சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்து பார்த்தார்கள்.
இதில் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.