Home /local-news /

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பனையேறிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.. 

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பனையேறிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.. 

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

Villupuram District | விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பனையேறிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

    தமிழக அரசு கள் இறக்க அனுமதி வழங்ககோரியும் பனையேறிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பனையேறிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பனை ஏறிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் கள் இறக்குவதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதை திரும்ப பெற வலியுறுத்தியும், பனையேறிகள் மீது போடப்பட்ட சாராய வழக்குகளை திரும்ப பெறக்கோரி இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 க்கும் மேற்பட்ட பனையேறிகள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பனையேறிகள் கள் இறக்க அனுமதிக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும், புரிகுடிசை கிராமத்தில் பனை மர தொழிலை நம்பி இருக்க கூடியவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு நடவடிக்கை எடுக்க கோரி கையில் பதாகைகளை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    பனையேறிகள் தலைமுறைகளாக பதநீர், இறக்குதல், கருப்பட்டி செய்தல், பனை ஓலைகளில் பொருட்கள் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தை சார்ந்தவர்கள் கள் இறக்குவதற்கு தமிழக அரசின் தடையை நீக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக அரசு நிதி நிலை அறிக்கையிலும் பனை மேம்பாட்டிற்காக 2 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பதநீர் இறக்கி விற்பனை செய்ய வலியுறுத்தியுள்ளது எனக்கூறி பனையேறிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி