பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதியினை பார்வையிட்டு மாவட்டத்தில் உள்ள 35 விடுதிகளையும் ஒரே நாளில் கள ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவிகளின் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றி கொடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மோகன் கூறினார்.
விழுப்புரத்தில் இன்று (22.04.2022) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையினர் மூலம், அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவியர்களுக்கான விடுதியினை மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கி வருவதை பார்வையிட்டு உணவு தரம் குறித்து ஆய்வு செய்துததனுடன் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு தயாரிக்கப்பட்டுள்ளதா எனவும், மேலும் விடுதியில் உணவு பொருட்களின் இருப்பு குறித்து விவரம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து தினசரி உணவு பட்டியலின் படி, இன்றைய மதிய உணவு தயாரிக்கப்படுகிறதா என கேட்டறிந்ததுடன் உணவு கூடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதுமட்டுமல்லாமல் மாணவிகளிடம் விடுதியில்,ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் உணவு தரமாகவும், ரூசியாகவுள்ளதா என கேட்டறிந்ததுடன், மேலும் இந்த விடுதியில் அத்தியாவசிய தேவை ஏதேனும் வழங்க வேண்டியுள்ளதா என பல கேள்விகளை மாணவர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்து கொண்டார்.
மேலும்,மாணவிகள் அனைவரும் நாள்தோறும் நூலகத்தில் தினசரி நாளிதழ் மற்றும் வரலாற்று சிறப்புகள் குறித்த புத்தகங்கள் படிக்கும் வகையில் கற்றல் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் இந்த ஆய்வு 35 அரசு விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. விடுதிகளின் கட்டிட எண்ணிக்கை, கழிப்பறை,வகுப்பறை, சமையல் கூடம் சுத்தம் போன்ற பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.