குடியரசு தினவிழாவினை முன்னிட்டு
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டு பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர்.
இந்திய நாட்டின் 73 -ஆவது குடியரசு தின விழா வருகின்ற புதன்கிழமை கொண்டபட உள்ள நிலையில், நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில்நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில்நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பேருந்து பயணிகளின் உடமைகள் மற்றும் பேருந்துகளில் சோதனை மேற்கொண்டனர்.மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வரக்கூடிய பேருந்துகளில் உள்ள பார்சல்கள் மற்றும் பேருந்து முழுவதும் போலீசார் முழுமையாக சோதனை மேற்கொண்டு பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.