தொழிற்சங்கத்தினர் 12 அம்ச கோரிக்களை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்
200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சத்துணவு ஊழியர் பெண்கள், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொழிற்சங்கத்தினர் தொழிலாளர்கள் சட்ட தொகுப்புகள் , அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் தொழிற்சங்கத்தினர், சத்துணவு ஊழியர் சங்க பெண்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தால், பணிக்கு செல்பவர்கள் மற்ற வேலைகளுக்கு செல்பவர்கள், இதர வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நின்றபடியே இருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது. இதனையடுத்து காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்.
செய்தியாளர் : சு . பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.