Home /local-news /

விழுப்புரத்தைச் சேர்ந்த கலைஞர்கள் கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்..

விழுப்புரத்தைச் சேர்ந்த கலைஞர்கள் கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்..

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram | விழுப்புரம் மாவட்டத்தில் இயல்,இசை நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    விழுப்புரம் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக சிறந்த கலைஞர்களுக்கு 2021-2022 ஆகிய ஆண்டிற்கு 15 கலைஞர்களுக்கு கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

    தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தவும் மற்றும் பாதுகாக்கும் நோக்கில் கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு 2002-2003 ஆம் ஆண்டு முதல் வயது மற்றும் கலைப் புலமைக்கு ஏற்றவாறு கலை விருதுகள் வழங்கிட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

    அதுபோல, 2021-2022 ஆம் ஆண்டிற்கு கலை இளமணி 3 விருதும்,கலை வளர்மணி 3 விருதும், கலைச் சுடர்மணி 3விருதும், கலை நன்மணி 3 விருதும், கலை முதுமணி 3 விருதும் என மொத்தம் 15 கலைஞர்களுக்கு கலை விருதுகள்,கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும் விழுப்புரம் மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக தர உள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இயல்,இசை நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் ஐந்து கலைஞர்களுக்கு வயது மற்றும் கலைப் புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்வாளர்குழு விரைவில் கூட்டப்படவுள்ளது.

    எனவே,விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து,தோல்பாவை, நையாண்டிமேளம், கரகாட்டம், காவடியாட்டம்,பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம்,கோல்கால் ஆட்டம் கழியல் ஆட்டம்,புலியாட்டம்,காளையாட்டம்,மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

    18 வயதிற்குட்பட்டக் கலைஞர்களுக்கு “கலை இளமணி” விருதும்,19 வயது முதல் 35 வயதிற்குட்பட்க் கலைஞர்களுக்கு “கலை வளர்மணி”விருதும்36 வயது முதல் 50 வயதிற்குட்பட்டக் கலைஞர்களுக்கு“கலைச் சுடர்மணி”விருதும்51 வயது முதல் 65 வயதிற்குட்பட்டக் கலைஞர்களுக்கு “கலை நன்மணி”விருதும்66 வயதிற்கும் மேற்பட்டக் கலைஞர்களுக்கு “கலை முதுமணி” விருதும் வழங்கப்பட உள்ளது.

    ஆகையினால் விண்ணப்பிக்க விரும்பும் கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயதுச் சான்று மற்றும் கலை தொடர்பான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய விருது,மாநில விருது மற்றும் மாவட்டக் கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணக்க முடியாது.

    இம்மாவட்ட விருது பெறத் தகுதிவாய்ந்த கலைஞர்களிடமிருந்து 20.05.2022 ஆம் நாளுக்குள் உதவி இயக்குநர்,மண்டலக் கலை பண்பாட்டு மையம்,மண்டல கயிறு வாரியம் அருகில்,வல்லம் சாலை பிள்ளையார்பட்டி தஞ்சாவூர் - 613 403 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து அனுப்பவேண்டும்.

    இந்த அரிதான வாய்ப்பை கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு விழுப்புரம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி