2021-2022-ம் ஆண்டு கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொன்மை சிறப்புமிக்க தமிழக கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக்குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில், இசைக் கருவிகள்,ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் என 500 கலைஞர்களுக்கு 50,00,000 தொகையை தமிழ்நாடு இயல், இசை,நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவி பெற விண்ணப்பிப்பவரின் தகுதிகள் :
1) விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்றவராகவும், பதிவினை புதுப்பித்தவராகவும் இருக்க வேண்டும்.
2) தனிப்பட்ட கலைஞரின் வயது 31.03.2022 தேதியில் 18 வயது நிரம்பியவராகவும்,60 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்இந்த தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
மேலும் விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
உறுப்பினர் - செயலாளர்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
31,பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை
சென்னை - 600 028.
தொலைபேசி எண்:044-2493 7471.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது. தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞர்கள் சுயமுகவரியிட்ட உறையில் 10 ரூபாய்க்கான முத்திரை ஒட்டியும் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கவேண்டும்.
இந்த நிதியுதவி பெற விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் 15.03.2022 செவ்வாய் மாலை 5.45 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாக தமிழ்நாடு இயல், இசை,நாடகமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மேலும் இதற்கான விண்ணப்பங்களை மன்றத்தில் நேரிலும் சென்று பெற்றுக்கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பினை கலைஞர் மற்றும் கலைக்குழுக்கள் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.