Home /local-news /

2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!

2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!

Pasumai Champion

Pasumai Champion

Green Champion Award | தமிழக அளவில், தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது  100 பேருக்கு,  தலா ரூ. 1, 00,000 வீதம் பரிசும் வழங்கப்படுகிறது.

    2021ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

    தமிழக அளவில், தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது  100 பேருக்கு,  தலா ரூ. 1, 00,000 வீதம் பரிசும் வழங்கப்படுகிறது.

    சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்,நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை,சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு,கடலோர பாதுகாப்பு மேலாண்மை

    போன்றவற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை சிறப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள்,தனி நபர்கள்,உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கும் பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது.

    விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 2 தனி நபர்கள் அல்லது நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தேர்வு செய்யும்.

    இதற்கான விண்ணப்பபடிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய www.tnpcb.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இதில் விண்ணப்பிக்க உரிய ஆவணங்களுடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு விண்ணப்பங்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகடு (CD) ஆகியன சேர்த்து, அந்த CD யின் மேல் ‘பசுமை சாம்பியன் விருது’ என குறிப்பிட்டு,விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

    மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம். மேலும், இந்த பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 2022 மார்ச் 31 ஆகும்.

    எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பலனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி